லியோ படத்தில் வனிதாவின் மகனை நோட் பன்னீங்களா – இதோ அந்த புகைப்படம்.

0
517
Leo
- Advertisement -

லியோ படத்தில் வனிதாவின் மகன் வந்து இருக்கும் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் லியோ படம் குறித்த அப்டேட்டுகள் தான் வைரலாகி கொண்டு வருகிறது. மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து இருக்கின்றார்கள்.

-விளம்பரம்-

இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக உருவாகி இருக்கிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருக்கிறது. லியோ படத்தில் எண்ணற்ற நடிகர்கள் நடித்து இருந்தாலும் படம் பார்த்த போது தான் அட இவரும் படத்தில் நடித்துள்ளாரா என்ற வியப்பு ஏற்பட்டது.. அந்த வகையில் வனிதாவின் மகன் கூட இந்த படத்தில் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நடிகர் விஜய் அர்ஜுனிடம் தான் லியோ இல்லை என்பதை நிரூபிக்க தன்னுடைய சில குடும்ப புகைப்படங்களை காண்பிப்பார் அந்த புகைப்படம் ஒன்றில் தனது மகனின் முதல் பிறந்தநாளின் போது எடுத்த புகைப்படம் என்று ஒரு புகைப்படத்தை காண்பிப்பார் அந்த புகைப்படத்தில் இருக்கும் அந்த சிறுவன் வேறு யாரும் கிடையாது பிரபல நடிகையான வனிதா விஜயகுமாரின் மூத்த மகனான ஸ்ரீ ஹரிதான்.

வனிதாவிற்கு ஏற்கனவே 2 முறை திருமணம் ஆகி பின்னர் அந்த இரண்டு திருமணம் விவாகரத்தில் முடிந்தது அனைவரும் அறிந்த விஷயம் தான். அதன் பின்னர் பீட்டர் பவுல் என்பவரை திருமணம் செய்து கொண்டு பின்னர் அவரையும் விட்டு பிரிந்து வந்தார். ஆனால் தங்களுக்குள் சட்டப்படி திருமணம் நடக்கவில்லை என்றும் கூறி இருந்தார் வனிதா. வனிதாவை பிரிந்த சில மாதத்தில் பீட்டர் பால் காலமாகி இருந்தார்.

-விளம்பரம்-

வனிதா கடந்த 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும், வனிதா மற்றும் ஆகாஷ் தம்பதியருக்கு திருமணம் முடிந்த ஓர் ஆண்டிலேயே ஸ்ரீஹரி என்ற மகன் பிறந்தார். நன்றாக சென்ற இவர்களது திருமண மகளும் கடந்த 2005ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது. அதன் பின்னர் தனது மகனை தன்னுடன் அனுப்பி விட வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஆகாஷ்.

தற்போது ஸ்ரீஹரி தனது தந்தை ஆகாசுடன் தான் வாழ்ந்து வருகிறார். ஸ்ரீஹரியும் சினிமாவில் எப்படியாவது நுழைந்துவிட வேண்டும் என்பது தான் ஆசை. ஸ்ரீஹரி ஒரு சில குறும்படங்களில் கூட நடித்து இருக்கிறார். மேலும், இவர் குழந்தை நட்சத்திரமாக கூட நடித்து இருக்கிறார். கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி படத்தில் சிறு வயது கார்த்தியாக ஸ்ரீஹரி நடித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement