தமிழ் நாட்ல பிஜேபில ஒரு 10 பேர் இருப்பாங்கள. வனிதாவின் வைரல் வீடியோ.

0
3061
nanjil
- Advertisement -

கடந்த சில தினங்களாகவே வனிதா தான் சமூகவலைதளத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறார் மூன்றாவது திருமண சர்ச்சைகள் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது வனிதா. வனிதா மூன்றாம் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படும் பீட்டர் பவுலுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் ஆனால் அவருக்கு விவாகரத்து கொடுக்காமல் வனிதாவை திருமணம் செய்து தான் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தி இருக்கிறது.

-விளம்பரம்-

வனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமண பிரச்சனைகள் ஒருபுறம் இருந்தாலும். கடந்த சில நாட்களாக வனிதா அளித்த பேட்டியில் அவர் சொன்ன வார்த்தைகளால்வனிதாவுக்கு பெரும் பிரச்சினை ஏற்பட்டது. அதிலும் குறிப்பாக நயன்தாரா குறித்து பேசி இருந்தது. தஞ்சாவூர் மக்கள் குறித்து சர்ச்சையான விஷயத்தை பேசி இருந்தது என்று வனிதா பல்வேறு சிக்கல்களில் சிக்கினார்.

- Advertisement -

அதிலும் தஞ்சாவூரில் இருக்கும் மக்களுக்கு இரண்டு மனைவிகள் இருப்பார்கள் என்று வனிதா கூறியது தஞ்சாவூர் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் தஞ்சாவூரில் பாரதிய ஜனதா கட்சியினரும் காங்கிரஸ் கட்சியினரும் வனிதா மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருந்தார்கள். மேலும், வனிதா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறி இருந்தார்கள். இதனால் வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்பும் கேட்டு இருந்தார்.

nanjil

இப்படி ஒரு நிலையில் நாஞ்சில் விஜயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வனிதா அளித்த பேட்டியின் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பார்க்கும் போது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வனிதாவுக்கும் விஜயகுமாருக்கும் ஏற்பட்ட பிரச்சனையின் போது வனிதா கொடுத்த பேட்டி என்று தெரிகிறது. அந்த பேட்டியில் பேசியிருக்கும் வனிதா, என்னை தாக்கிய விவகாரத்தில் பிஜேபி உடைய 100 சதவீத தலையீடு இதில் இருக்கிறது. காரணம் என்னுடைய தந்தைக்கு பிஜேபியில்ஆதரவு இருக்கிறது. பிஜேபி பொறுத்தவரை தமிழ்நாட்டில் ஒரு பத்து பேர் இருப்பார்களா.அதில் விஜயகுமார் மிகவும் முக்கியமான ஒரு நபர் அதனால் தான் அவரை ஆதரித்து இருக்கிறார்கள் அவர்களுக்கு விஜயகுமார் வேண்டும் ஏனென்றால் அவரை வைத்துதான் தமிழகத்தில் வரும் ஆட்சியைப் பிடிக்கப் போகிறது என்று கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement