விஜய் டிவி பிரபலமும் பிரபல காமெடி நடிகருமான வடிவேல் பாலாஜி உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் மேடை காமெடி கலைஞரும் காமெடி நடிகருமான பாலாஜி. வடிவேல் பாலாஜி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு சீசன் 4 மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அந்த சீசனில் வடிவேல் பாலாஜி பட்டத்தை வெல்லவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.
https://twitter.com/ketta_vini/status/1304140634391887872
இவரது தனித்துவமே வடிவேலு ஸ்லாங்கும் அவரது பாடி லாங்குவேஜும் தான். வடிவேலு திரைப்படத்தில் பேசிய வசனங்கள் தான். வடிவேலுவை போல மிமிக்ரி செய்யும் மேடை கலைஞர்கள் ‘வேணா… வலிக்கிது, அழுதுருவேன் என்ற ஒரே வசனத்தை பேசி போர் அடிக்க வைத்த நிலையில் வடிவேல் பாலாஜி நாய் சேகர், வண்டு முருகன், சூனா பானா என வடிவேலுவின் அத்தனை மாடுலேஷனிலும் நடித்து அசத்தி இருந்தார்.
கலக்க போவது யாரு சீசன் 4 நிகழ்ச்சியை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேரு காமெடி நிகழ்ச்சியில் அசத்திய வடிவேலு சமீபத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வடிவேல் பாலாஜி பின்னர் அங்கே சிகிச்சை சரியில்லாததால் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிப்பட்டு பின்னர் அங்கு உயிரிழந்தார்.
https://twitter.com/vanithavijayku1/status/1304188718605975552
வடிவேல் பாலாஜியின் மரணத்திற்கு பலர் தங்களது இறங்களை தெரிவித்து வரும் நிலையில் நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான வனிதா வடிவேல் பாலாஜியின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் , தனது ட்விட்டர் பக்கத்தில் 'எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவரை எனக்கு தெரியாது. நாங்கள் இருவரும் ஒன்றாக சந்தித்ததும் இல்லை வேலை செய்ததும் இல்லை. ஆனால், அவர் மிகவும் திறமையான மனிதர் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அவரது குடும்பம் என்ன ஆகும் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை' என்று பதிவிட்டிருந்தார். இதற்கு ரசிகர் ஒருவர் விஜய் டிவியில் இருந்தும் உங்களுக்கு வடிவேல் பாலாஜியை தெரியாதா என்று கேட்டிருந்தார்.
அதற்கு பதில் அளித்த வனிதா, கடவுள் சத்தியமாக இதற்கு முன்னால் அவரது நிகழ்ச்சிகளை நான் பார்த்ததில்லை நான் நடுவராக இருப்பதால்தான் தற்போது கூட கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை பார்க்கிறேன் இதற்கு முன்னாலோ அல்லது தற்போது நான் அவருடன் பணியாற்றியது இல்லை என்று கூறியுள்ளார் வனிதா.


