என்னது வனிதா மகளும் நடிகையா ? இத பாருங்க என்னனு.

0
6830
vanitha
- Advertisement -

வனிதா மற்றும் பீட்டர் பவுல் திருமணம் பற்றிய செய்திகள் தான் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் பரவலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. வனிதாவிற்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி அந்த இரண்டு திருமணம் விவாகரத்தில் முடிந்தது என்பது அனைவரும் அறிந்த விஷயம்தான். அதேபோல இவரது முதல் கணவரான ஆகாஷுக்கும் வனிதாவிற்கும் பிறந்த மகன் ஸ்ரீஹரியால் ஏற்பட்ட பிரச்சினைகளும் ஏராளம். இந்த பிரச்சனைகளால் தான் வனிதா குடும்பத்திற்கும வனிதா விற்கும் ஏகப்பட்ட பிரச்சினைகள் வெடித்தது.

-விளம்பரம்-
View this post on Instagram

#jawline #jawlinegoals

A post shared by Jovika Vijaykumar (@jovika_vijaykumar) on

வனிதா கடந்த 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆகாஷ் வேறு யாருமில்லை சமுத்திரம் படத்தில் சரத்குமாரின் தங்கை கணவராக நடித்திருப்பாரா அவர் தான். நடிகர் ஆகாஷ் தமிழில் சொக்கத்தங்கம், தாமிரபரணி என்று ஒரு சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வனிதா மற்றும் ஆகாஷ் தம்பதியருக்கு திருமணம் முடிந்த ஓர் ஆண்டிலேயே விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும் ஜோவிகா என்ற மகளும் பிறந்தார்கள்.

- Advertisement -

நன்றாக சென்ற இவர்களது திருமண வாழ்க்கை கடந்த 2005ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது.அதன் பின்னர் தனது மகனை தன்னுடன் அனுப்பி விட வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஆகாஷ்.இதையடுத்து மகள்கள் அம்மாவுடனும், மகன் தந்தையுடனும் வளர வேண்டும் என்று தரவிடபட்டது. தற்போது ஆகாஷ் சினிமாவில் நடிப்பதைவிட்டு விட்டு தனது மகனுடன் தனியாக வசித்து வருகிறாராம்.

ஆகாசுக்கு பிறந்த மகள் ஜோவிகா வனிதாவுடன் வசித்து வருகிறார். இவர் வனிதாவை போல இந்த வயதிலேயே படு போல்ட்டாக இருந்து வருகிறார். மேலும், இவர் இன்ஸ்டாகிராமில் இருக்கிறார். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் சுய விவரத்தில் நடிகர் என்று குறிப்பிட்டுள்ளார். இவர் ஏற்கனவே ஏதவது படத்தில் நடித்துள்ளாரா இல்லை இனி எதாவது படத்தில் நடிக்க போகிறாரா என்பது தான் தெரியவில்லை.

-விளம்பரம்-
Advertisement