சங்கரின் உதவி இயக்குனர் படத்தில் கதாநாயகியாக களமிறங்க இருக்கும் வனிதா. ஏற்கனவே அவர் இந்த படத்தை எடுத்தவர்.

0
1441
vanitha
- Advertisement -

பிரபல நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகளான வனிதாவிற்கு ஏற்கனவே 2 முறை திருமணம் ஆகி பின்னர் அந்த இரண்டு திருமணம் விவாகரத்தில் முடிந்தது அனைவரும் அறிந்த விஷயம் தான். அதன் பின்னர் இவர் நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர் உடன் காதலில் இருந்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபம் பிரிந்துவிட்டார்கள். அதன் பின்னர் தனது இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வந்த வனிதா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பீட்டர் பவுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

-விளம்பரம்-
Vanitha Vijayakumar Phone Number, House Address, Contact Address

இவர்கள் இருவரின் திருமண விவகாரத்தில் எண்ணெற்ற பிரச்சனைகள் வெடித்தது. ஆனால் அதையெல்லாம் மீறி வனிதா, பீட்டர் பவுலை திருமணம் செய்துகொண்டார். இந்த பிரச்சனை ஒரு சில மாதங்கள் ஓடியது மேலும், விரைவில் இருவரும் சட்டப்படி திருமணம் செய்து கொள்வதாகவும் இருந்தனர். இதனிடையே வனிதா பீட்டர் பவுலுடன் சந்தோசமாக வாழ்ந்து வந்தார்.சமீபத்தில் பீட்டர் பவுல் பிரிந்துவிட்டதாக நடிகை வனிதா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதையும் பாருங்க : பிக் பாஸ் கொண்டாட்டத்தில் வாத்தி கம்மிங் பாடலுக்கு படு மாஸ் என்ட்ரி கொடுத்துள்ள ஆரி – லீக்கான வீடியோ.

- Advertisement -

நடிகை வனிதா சந்திரலேகா படத்தில் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர் ஒரு சில தமிழ் படங்களில் நடித்த வனிதா, திருமணத்திற்கு பின் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சினிமாவில் இருந்து விலகினார். பின்னர் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு ரீ-என்ட்ரியை கொடுத்தது. அதன் பின்னர் நடிகை வனிதா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வந்தார். சமீபத்தில் தான் அந்த நிகழ்ச்சி நிறைவடைந்தது. அதே போல யூடூயூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

IFlicks: Bobby Simha becomes a hero || Bobby Simha becomes a hero

இப்படி ஒரு நிலையில் வனிதா மீண்டும் கதாநாயகியாக நடிக்க இருக்கிறாராம். கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா நடித்த பாம்பு சட்டை படத்தை இயக்கிய ஆடம் தாசன் இந்த படத்தை இயக்க உள்ளாராம். இவர் இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது முழுக்க முழுக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படமாம். படத்துக்கு அனல் காற்று என்றும் பெயர் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தில் நடிப்பதற்காக வனிதா உடல் எடையை குறைத்து இருக்கிறார். இதுகுறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement