ஒரு பக்கம் வனிதா பிரச்சனை. மறுபக்கம் விஜய குமார் இளைய மகள் வீட்டில் நடந்த விஷசம்.

0
2975
vanitha
- Advertisement -

கடந்த சில வாரமாக வனிதாவின் பிரச்சனை தான் ஓடிக்கொண்டு இருக்கிறது.பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான வணிதாவிற்கும் அவரது குடும்பத்தாருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு இருந்தது. இதனால் வனிதாவின் சகோதரர்களான அருண்விஜய், ப்ரீதா, ஸ்ரீதேவி, அனிதா, கவிதா என்று அனைவருமே வனிதாவிடம் பேசுவதை நிறுத்தி விட்டார்கள். இதனால் இரண்டு திருமணம் ஆன பின்னரும் வனிதா தனியாகத்தான் வாழ்ந்து வருகிறார்.

-விளம்பரம்-

வனிதா விஜய்குமார் அருண் விஜய்யின் சொந்த சகோதரி இல்லை என்பது பலரும் அறிந்திடாத ஒன்று. விஜயகுமார் கடந்த 1969 ஆம் ஆண்டு முத்துக்கன்னு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.பின்னர் 1976 யில் நடிகை மஞ்சுளாவை திருமணம் செய்து கொண்டார். விஜயகுமாரின் முதல் மனைவியான முத்துக்கனுக்கு பிறந்தவர் தான் அருண் விஜய். மேலும், இவருடன் அனிதா , கவிதா என்ற இரண்டு சகோதரிகள் பிறந்தனர்.

- Advertisement -

மேலும், மஞ்சுளாவிற்கு பிறந்தவர்கள் வனிதா, ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவி. ஆனால், அருண் விஜய் அனைவரையும் உடன் பிறந்த சகோதரிகளாக தான் பாவித்து வந்தார்.இதில் நடிகை ஸ்ரீதேவி,வனிதாவிற்கு முன்னதாகவே சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். மேலும், காதல் வைரஸ் என்ற படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர். பின்னர் பல்வேறு படங்களில் நடித்து இருந்தார்.

View this post on Instagram

❤❤❤❤

A post shared by sridevi vijaykumar (@sridevi_vijaykumar) on

இவருக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு ராகுல் என்பவருடன் திருமணம் நடந்தது. தற்போது இவருக்கு 4 வயதில் ‘ரூபிகா’ என்ற மகளும் இருக்கிறார். சமீபத்தில் தனது மகளின் நான்காவது பிறந்தநாளை வீட்டில் கொண்டாடியுள்ளார் வனிதாவின் கடைசி சகோதரியான ஸ்ரீதேவி. என்னதான் வனிதா பிரச்சனை ஒரு புறம் இருந்தாலும் விஜயகுமார் குடும்பத்தினர் அதனை பற்றி எந்த கவலையும் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement