நேர்கொண்ட பார்வை படத்தை குறிப்பிட்டு அபிராமியை வெளுத்து வாங்கிய வனிதா.!

0
2669
Vanitha

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு காதல் ரொமான்ஸ் ஓடிக்கொண்டு இருந்தாலும் சமீப நாட்களாக முகென் மற்றும் அபிராமி விஷயம் தான் தீயாக பேசப்பட்டது. முகெனை தொரத்தி தொரத்தி காதலித்த அபிராமியால் முகென் தனது கையால் கட்டிலை எல்லாம் உடைத்தார். ஒரு கட்டத்தில் இவர்கள் விஷயம் எல்லை மீறி போக கமலே இவர்கள் இருவருக்கும் அட்வைஸ் செய்தார்.

- Advertisement -

இவர்கள் இருவரின் விஷயத்தில் அபிராமியை தான் பலரும் குறை கூறி வந்தனர். இந்த நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்ற வனிதா அணைத்து போட்டியாளர்களையும் வச்சி செய்தார். அப்போது அபிராமியிடம் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படம் குறித்து பேசினார் வனிதா.

இதையும் பாருங்க : சர்கார் படத்திற்கு பின் தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமான முதல் தமிழ் படம்.! 

பிக் பாஸ் இன் நேற்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்களை அனைவரும் அழைத்து பேசிக் கொண்டிருந்தார் வனிதா அப்போது அபிராமி குறித்து பேசுகையில் நீ மிகவும் வெளியான பெண் ஆனால் உன்னை நீயே காதல் என்ற பெயரில் கேவலப்படுத்தி கொண்டிருக்கிறாய் உன்னுடைய கண்ணீருக்கு ஒரு மதிப்பே இல்லாமல் போய்விட்டது உன்னுடைய கண்ணீரை பார்த்த பிறகு இனி அந்த பெண் அழுதாலும் அதற்கு ஒரு மதிப்பு இல்லாமல் தான் போகும்

-விளம்பரம்-

நான் நீ நடித்த நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்தேன் உன்னுடைய மீது நடிப்பு மிகவும் அருமையாக இருந்தது என்று கைகொடுத்து பாராட்டினார் வனிதா மேலும் அந்த படம் குறித்து மற்ற போட்டியாளர்களை கூறிய வனிதா அந்த படத்தில் பெண்களை ஆண்கள் எப்படி பார்க்க வேண்டும் என்பதுதான் கூறியுள்ளார்கள் ஒரு காதலியாக இருந்தாலும் தோழியாக இருந்தாலும் ஏன் மனைவியாகவே இருந்தாலும் ஒரு பெண் வேண்டாம் என்று சொன்னால் வேண்டாம் தான். அதுதான் அந்த படத்தில் மைய கருது no means no என்ற கருத்தைத்தான் அஜீத் கூறியுள்ளார். அப்படி இருக்கும்போது இங்கு உள்ள அனைத்து பெண்களும் அதை பின்பற்ற வேண்டும் என்று கூறியிருந்தார் வனிதா.

Advertisement