அனன்யாவின் இடுப்பில் இருக்கும் டாட்டூவை காட்ட சொல்றாங்க – அப்பாவியாக புலம்பிய அனன்யா. வைரலாகும் வீடியோ.

0
1425
- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் மீண்டும் ஒரு சர்ச்சையில் விசித்ரா சிக்கி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கோலாகலமாக ஞாயிற்று கிழமை தொடங்கி மூன்று நாட்கள் கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு விஜய், ஜோவிகா விஜயகுமார், அனன்யா ராவ், ஐஷு, அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர்.

-விளம்பரம்-

மேலும், இந்த சீசனில் வித்தியாசமாக இரண்டு வீடுகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. மற்ற சீசன்களை போல இந்த சீனிலும் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்த சீசனையும் நடிகர் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். முதல் நாளே நிகழ்ச்சியில் நாமினேஷன் பட்டியில் அனன்யா, ஐசு, பவா செல்லதுரை, ரவீனா, ஜோவிகா, பிரதீப் ஆண்டனி, யோகேந்திரன் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்று இருக்கிறது.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 7:

அதோடு இந்த முறை நிகழ்ச்சி முதல் நாளே கலவரம் தொடங்கிவிட்டது. முதல் நாள் காலையிலேயே ஜோவிகாவிற்கு சீனியஸ் நடிகர்கள் எல்லோரும் படிப்பு குறித்து அறிவுரை சொன்னார்கள். அதிலும் குறிப்பாக யுகேந்திரன் விசித்திரா இருவரும் பயங்கரமாக ஜோதிகாவிற்கு அறிவுரை சொல்லியிருந்தார்கள். ஆனால், அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் ஜோவிகா தன்னுடைய வேலையை பார்த்துக் கொண்டிருந்தார். அதை முடித்தவுடன் பிரதீப் ஆண்டனி தேவையில்லாமல் தன் வாயை கொடுத்து புண்ணாக்கி கொண்டார்.

முதல் நாள் நிகழ்ச்சி:

பின் கேப்டனால் தேர்வு செய்யப்பட்ட ஆறு பேரை சின்ன பிக் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைத்திருந்தார்கள். அந்த நபர்கள் பெரிய பிக்பாஸ் வீட்டில் இருக்கும் எந்த டாஸ்க்கிலும் கலந்து கொள்ள கூடாது என்றும் கிளீனிங், சமையல் என அனைத்தையும் அவர்கள் தான் செய்ய வேண்டும் என்று பிக் பாஸ் கூறி இருந்தார். அது மட்டுமில்லாமல் முதல் நாளே இரண்டு பேரை நாமினேட் செய்ய வேண்டும் என்று பிக் பாஸ் அறிவித்திருந்தது.

-விளம்பரம்-

விசித்திரா குறித்த சர்ச்சை:

அதன்படி ஒவ்வொரு போட்டியாளர்களும் ஒவ்வொரு காரணங்களை சொல்லி நாமினேஷன் செய்திருந்தார்கள். ஆனால், விசித்ரா உடையை குறித்து பேசி இருந்தது பயங்கர சர்ச்சையை கிளப்பி இருந்தது. பின் விசித்ராவும், யுகேந்திரனும் பிக் பாஸ் போட்ட விதியை மீறி சமைக்க உதவி இருக்கிறார்கள். இதனால் அவர்கள் இருவரையும் சின்ன பிக் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் மீண்டும் விசித்திரா சர்ச்சையில் மாட்டி இருக்கும் வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, அனன்யா தன்னுடைய உடம்பில் டாட்டூ இருக்கிறார்.

விசித்திரா-அனன்யா சர்ச்சை:

இதை குறித்து எல்லோரும் பேசி இருக்கிறார்கள். விசித்ரா அனன்யாவிடம் டாட்டூவை காட்ட சொல்லி கேட்டிருக்கிறார். அனன்யாவும் காண்பித்து விட்டு பவா செல்லதுரை, என் உடலில் போட்டிருக்கும் டாட்டூ பற்றி இந்த வீட்டில் எல்லோருமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். இன்று காலையில் கூட விசித்திரா அம்மா வந்து என் இடுப்புக்கு பின்னால் இருக்கும் டாட்டூவை காட்ட சொன்னார். ஆனால், என்னுடைய அம்மா டாட்டூகளை யாரிடமும் காட்டக் கூடாது என்று சொன்னார். விசித்திரா எதற்கு கேட்டார்? என்று தெரியும். அதனால்தான் நான் வேண்டுமென்றே காட்டினேன் என்று வருத்தத்துடன் பேசி இருக்கிறார். இதை பார்த்த பலரும் விசித்ரா எதற்கு தேவையில்லாமல் எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைக்கிறார் என்றெல்லாம் நெட்டிசன்கள் வறுத்து எடுத்து வருகிறார்கள் .

Advertisement