இவள வச்சிக்கிட்டு எதுவும் பேசாதீங்க, இவ ஒரு சீப்பான ஆள் – பூர்ணிமாவின் உண்மை முகத்தை கிழித்த விச்சு

0
1395
- Advertisement -

அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கோலாகலமாக கடந்த வாரம் ஞாயிற்று கிழமை தொடங்கிஇரண்டு வாரத்தை கடந்து இருக்கிறது. மற்ற சீசன்களை போல இந்த சீனிலும் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு விஜய், ஜோவிகா விஜயகுமார், அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர்.

-விளம்பரம்-

இதில் முதல் வாரமே அனன்யா வெளியேற்றப்பட்டார். இந்த இதுவரை இரண்டு வாரம் கடந்து இருக்கிறது. இந்த இரண்டு வாரத்தில் பெண் போட்டியாளர்களில் மாயா மற்றும் பூர்ணிமா தான் அதிகம் ரசிகர்களின் எரிச்சல்களை சம்பாதித்து வருகின்றனர். அதிலும் மாயா என்ன சொன்னாலும் அதற்கு ஜால்ரா தட்டி வருகிறார் பூர்ணிமா. இதனாலேயே இவர் மீது ரசிகர்களின் வெறுப்பு அதிகமாகி கொண்டே வருகிறது.

- Advertisement -

பூர்ணிமா யூடுயூப் மூலம் தான் பிரபலமானார். மேலும், இவரை சமூக வலைத்தளத்தில் கூட பலர் பின்தொடர்ந்து வருகின்றனர். இதனால் பிக் பாஸில் இவர் சிறப்பாக வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவரோ சென்ற முதல் நாளில் இருந்தே விஜய் மற்றும் மாயாவுடன் இணைந்து ஜல்ரா தட்டி வருகிறார். இப்படி ஒரு நிலையில் பூர்ணிமாவின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டி இருக்கிறார் விசித்ரா.

இதுகுறித்து பேசியுள்ள விசித்திரா ‘ இவள வச்சுட்டு எதுவும் பேசாதீங்க இங்க இருக்கிறது அங்க சொல்றது அங்க இருக்கிறது இங்கு சொல்வது இதைத்தான் இவ செய்வா. மாயாக்கு நீ வக்காலத்து வாங்க வேண்டாம். உங்க கிட்ட இருக்கற சீப்பான விஷயமே இங்க இருக்கிறது அங்க சொல்றது அங்க இருக்கிறது இங்கு சொல்வது தான். மாயா எதாவது சொல்லி அனுப்புனா இவ செய்வா என்று பூர்ணிமாவை வச்சு செய்துள்ளார்.

-விளம்பரம்-

இது ஒருபுறம் இருக்க கடந்த திங்கள் கிழமை இரண்டாம் வாரத்திற்கான நாமினேசன் நடைபெற்று இருந்தது. அதில் அக்ஷயா, விசித்ரா, ஜோவிகா, பூர்ணிமா விஷ்ணு, மாயா, பிரதீப் ஆகியோர் நாமினேட் ஆகிருக்கிறார்கள். இந்த வாரம் அனைவரும் எதிர்பார்த்த மாயாவின் பெயர் இடம் பெற்று இருக்கிறது. எனவே,அவர் அல்லது பூர்ணிமா தான் இந்த வாரம் வெளியேறுவார் என்று எதிர்பார்த்தனர்.

மேலும், பல தனியார் வலைத்தளங்களில் நடைபெற்ற ஓட்டிங்கில் கூட மாயா மற்றும் பூர்ணிமாவிற்கு தான் குறைவான வாக்குகள் தற்போது பதிவாகி வருகிறது. ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பவா செல்லத்துரை பிக் பாஸ் வீட்டில் இருந்து தாமாக முன் வந்து வெளியேறியதால் இந்த வாரம் எலிமினேஷனும் இல்லை என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் ரசிகர்கள் பலரும் மாயா தப்பித்து விட்டார் என்று கூறி வருகின்றனர்.

Advertisement