ஒரு பெண்ணின் Periods பத்தி இப்படியா பேசுவீங்க – ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளான விசித்ரா

0
494
- Advertisement -

அர்ச்சனாவை மோசமாக பேசிய விசித்ராவை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வரும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 68 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

இதுவரை இதில் அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி,பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ. ஜோவிகா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். பின் வைல்ட் கார்ட் போட்டியாளராக விஜய் வர்மா, அனன்யா பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து இருக்கிறார்கள். கடந்த சில வாரமாகவே பிக் பாஸ் நிகழ்ச்சி அனல் பறந்து கொண்டிருக்கின்றது. மேலும், இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

பிக் பாஸ் 7:

‘மிக்ஜாம் புலன் காரணமாக பெரும்பான்மையான மக்கள் வாக்களிக்க இயலாததால், இந்த வார எலிமினேஷன் ரத்து செய்யப்படுகிறது’ என்று அறிவித்து இருந்தது. போட்டியாளர்களும் கடுமையாக ஒருவரை ஒருவர் தாக்கி விளையாடி வருகிறார்கள். குறிப்பாக, ஆரம்பத்தில் நெருக்கமாக இருந்த அர்ச்சனா- விசித்திரா இருவருமே தற்போது எதிரிகளாக ஒருவரை ஒருவர் மோசமாக விமர்சித்து வருகிறார்கள். அதற்கு காரணம் விசித்ரா, மாயா கேமில் சென்றது என்று கூறப்படுகிறது.

கோல்ட் ஸ்டார் டாஸ்க்:

நேற்றைய எபிசோடில் விஷ்ணு – நிக்சன் சுத்தம் செய்வதை குறித்து பேசிக் கொண்டிருக்கும் போது அர்ச்சனா நிக்சனிடம் பேசி இருக்கிறார். இதனால் அர்ச்சனா மற்றும் நிக்சனுக்கு கடும் வாக்குவாதம் ஏற்ப்பட்டது. அப்போது அர்ச்சனாவை கறி துப்பி, வாடி போடி, நாயே, நான் கலாய்க்க ஆரம்பித்தால் 3 நாள் அலுவ, மூஞ்ச பாரு கருமம், சும்மா வினுஷா, வினுஷானு சொன்ன சொருகிடுவேன் என்று எல்லை மீறி மிரட்டி இருந்தார் நிக்சன். பின் பிக் பாஸ் வீட்டில் கோல்ட் ஸ்டார் டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த முறை இந்த டாஸ்கில் வெல்பவர்களுக்கு 5 கோல்டு ஸ்டார் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

-விளம்பரம்-

அர்ச்சனா-விசித்திரா சண்டை:

இந்த ஸ்டார் தங்களுக்கு வேண்டும் என்றும் விவாதிக்கலாம், இல்லை என்றால் யாருக்கும் இந்த ஸ்டார் போக கூடாது என்றும் விவாதிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் போட்டியாளர்கள் ஒவ்வொரும் மற்றவர்களை குறை சொல்லி விவாதித்து இருக்கிறார்கள். இந்த நிலையில் விசித்ரா அர்ச்சனாவை பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சை கிளப்பி இருக்கிறது. அதாவது, டாஸ்கில் அர்ச்சனா பேசிக் கொண்டிருக்கும் போது விசித்திரா பீரியட்ஸ் வலி என்று சொல்லி சிம்பதி கிரியேட் பண்றியா? என்று அர்ச்சனாவை மோசமாக விமர்சித்து பேசி இருக்கிறார்.

நெட்டிசன்கள் விமர்சனம்:

உடனே அர்ச்சனாவும், அதில் என்ன தப்பு. அது taboo இல்ல என்று அவரிடம் வாக்குவாதம் செய்து பதிலடி கொடுத்து இருக்கிறார். தற்போது இவர்கள் இருவரும் பேசி இருக்கும் வீடியோ தான் வைரல் ஆகி வருகிறது. இதை பார்த்த பலரும், விசித்ரா செய்வது ரொம்ப தப்பு. ஒரு பெண்ணாக இருந்து ஒரு பெண்ணைப் பற்றி இப்படி எல்லாம் பேச வேண்டிய அவசியம் இல்லை என்றெல்லாம் வறுத்து எடுத்து வருகின்றனர்.

Advertisement