விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் வயல்ட் கார்ட் என்ட்ரி மூலம் நுழைந்தவர் நடிகை விஜயலக்ஷ்மி. பிரபல இயக்குனர் அகத்தியனின் மகளான இவருக்கு நிரஞ்சனி என்ற சகோதரியும் இருக்கிறார், அவரும் ஒரு சினிமா பிரபலம் தான்.நடிகை விஜயலட்சுமி, 2007 ஆம் ஆண்டு வெளியான ‘சென்னை 28’ படத்தின் மூலம் அறிமுகமானார் விஜயலக்ஷ்மி. அதன் பின்னர் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். இறுதியாக சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்திருந்தார்.

இவர் தனது பள்ளி பருவ தோழரான பெரோஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. மேலும், விஜயலட்சுமியின் கணவர் பெரோஸ். விஜயலட்சுமியின் கணவர் பெரோஸ், பண்டிகை என்ற படத்தை கூட இயக்கி இருந்தார். இவரது ஒரு சகோதரியான கனி, சமீபத்தில் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்றார்.

இதையும் பாருங்க : சீதையாக நடிக்க 12 கோடி கேட்ட நடிகை – வக்காலத்து வாங்கிய நடிகை டாப்ஸி.

Advertisement

இதில் பங்குபெற்று முதல் பரிசையும் தட்டி சென்றார். அதே போல இவரின் தங்கையான நிரஞ்சனாவும் ஒரு நடிகை தான். இவர் கடந்த ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ பதில் ரக்ஷன் ஜோடியாக நடித்து இருந்தார். மேலும், இந்த படத்தில் நடித்த போது படத்தின் இயக்குனர் தேசிங்கு மீது காதல் கொண்டார் நிரஞ்சனா.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் நடிகை நிரஞ்சனா, இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் தனது அக்கா விஜயலக்ஷ்மி பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக விஜயலக்ஷ்மியின் சிறு வயது புகைப்படம் ஒன்றை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து உள்ளார். இந்த புகைப்படத்தை பார்க்கும் போது விஜயலட்சுமி வயதுக்கு வந்த போது எடுத்த புகைப்படம் போல இருக்கிறது.

Advertisement
Advertisement