சீதையாக நடிக்க 12 கோடி கேட்ட நடிகை – வக்காலத்து வாங்கிய நடிகை டாப்ஸி.

0
1139
tapsee
- Advertisement -

சீதையாக நடிக்க 12 கோடி சம்பளம் கேட்ட நடிகையை பலர் கேலி செய்த நிலையில் தற்போது அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் நடிகை டாப்ஸி. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக கலக்கி கொண்டு இருக்கிறார் நடிகை டாப்ஸி பன்னு. இவர் தமிழில் 2011 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘ஆடுகளம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் . அதனைத் தொடர்ந்து நடிகை டாப்சி அவர்கள் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கிய உடன் இவர் பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்த தொடங்கினார். தற்போது டாப்சி அவர்கள் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-
tapsee

மேலும், சினிமாவில் நடிகர்களுக்கு இணையாக நடிகைகளுக்கும் சம்பளம் தர வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். சமீபத்தில் பாலிவுட்டின் பிரபல நடிகையான கரீனா கபூர், சீதையாக நடிப்பதற்கு 12 கோடி ருபாய் சம்பளம் கேட்டார் என்று செய்திகள் வெளியானது. இதையடுத்து கரீனா கபூரை பாலிவுட் ரசிகர்கள் பலரும் கேலி செய்ய துவங்கினர். இப்படி ஒரு நிலையில் 12 கோடி சம்பளம் கேட்ட கரீனா கபூருக்கு ஆதரவாக பேசியுள்ளார் டாப்ஸி.

இதையும் பாருங்க : OTT யில் ‘நாரப்பா’ பிளேடால் தனது கையை அறுத்துக்கொண்டு வீடியோ வெளியிட்ட பெண் ரசிகை.

- Advertisement -

இதுகுறித்து பேசியுள்ள அவர், இதுவே அந்த இடத்தில் ஒரு ஆண் இருந்திருந்தால்ஒரு குறிப்பிட்ட தொகையை சம்பளமாக கேட்டால் ‘அவருடைய மார்க்கெட் உயர்ந்து விட்டது’ என்று சொல்வார்கள். மேலும், அவர்கள் வாழ்க்கையில் சாதித்து விட்டது போல சொல்வார்கள். இதுவே ஒரு பெண் கேட்டாள் ‘அவள் அதிகம் கேட்கிறாள்’ என்று தான் கூறுவார்கள். அதுவே ஏன் டாப்ஸி கேட்கக்கூடாது ? இப்படி சம்பளத்தை கேட்பது அவரின் வேலை, இதிகாச கதாபாத்திரங்களில் ஆண்கள் மட்டும்தான் நடித்திருக்கிறார்கள் ? இல்லை, அவர்கள் இருவருமாக நடித்து விட்டார்களா என்று கூறியுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் பேட்டி ஒன்றில் , நடிகர்களை விட நடிகைகளுக்கு ஏன் சம்பளம் வழங்குவதில்லை என்று நடிகை டாப்ஸி காட்டமாக பேசி இருந்தார். தனது படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற டாப்ஸியிடம், நிருபர் ஒருவர் கதாநாயகிகளை விட, கதாநாயகர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கப்படுவது பற்றி உங்கள் கருத்து? என்று கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த டாப்ஸி, கதாநாயகிகளை விட, கதாநாயகர்களுக்கு அதிக சம்பளம் கொடுப்பதில் நியாயம் இருக்கிறது.

-விளம்பரம்-

அவர்களை வைத்துத்தான் வியாபாரம் நடக்கிறது. ஆனால், நடிகர்களுக்கு இணையாக நடிகைகளும் சம்பளம் வாங்க வேண்டும் என்று கூறி இருந்தார். மேலும் தற்போது நீங்கள் பாலிவுட் பட உலகின் லேடி சூப்பர் ஸ்டாரா? என கேள்வி கேட்கப்பதற்கு . சீரியசாக பதில் அளித்த டாப்சி. அப்படியெல்லாம் மிக கூடுதலான உயரத்துக்கு என்னை கொண்டு சென்று விடாதீர்கள். ஒரு படத்துக்கு நான் மூன்று கோடி ரூபாய்தான் வாங்குகிறேன். என்னை விட இரு மடங்கு அதிகமாக ஆறு கோடி ரூபாய் வாங்கும் நடிகை நயன்தாரா தான் உண்மையிலேயே லேடி சூப்பர் ஸ்டார். அவர் அளவுக்கு நான் வர வேண்டும் என்றால், நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement