ஐஸ்வர்யா செய்த கேவலமான செயல்.! வீடியோவை பதிவிட்ட அசிங்கப்படுத்திய கணவர்.!

0
803
Aishwarya

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த சில வாரத்திலேயே பிக் பாஸ் மீது எழுந்த முதல் குற்றச்சாட்டு ஐஸ்வர்யாவிற்கு ஆதரவாக பல செய்லகளை செய்கிறார் என்பது தான். ஐஸ்வர்யாவின் சில மோசமான நடவடிக்கைகளை பார்த்து வெறுத்துப்போன ரசிகர்கள் ஐஸ்வர்யா வெளியேற வேண்டும் என்று பல வாரமாக எதிர்பார்த்து வருகின்றனர்.

ஆனால், பல தந்திர வேலைகளை செய்து ஐஸ்வர்யாவை பிக் பாஸ் நிகழ்ச்சியில் தக்கவைத்து வருகிறார் பிக் பாஸ். ஐஸ்வர்யாவை பிக் பாஸ் தனி கவனத்துடன் பார்த்துக்கொள்கிறார் என்பதற்கு சமீபத்தில் ஒரு ஆதாரம் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.அதனை விஜயலட்சுமியின் கணவரும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த டாஸ்கில் முதல் ஆளாக விஜயலக்ஷ்மி பஸ்ஸர் மீது கை வைத்து நின்றபோது யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் மாறி மாறி விஜயலக்ஷ்மி மீது ஷேவிங் கிரீம், கோலமாவு, முட்டை என்று அனைத்தையும் வீசினர்.மேலும், ஐஸ் பேக்கையும் விஜயலக்ஷ்மி மீது வைத்த ஐஸ்வர்யா volini spray வை எடுத்து விஜியின் கண்கலில் அடிக்கவும் முயற்சி செய்தார். ஆனால், விஜி தனது கைகளை வைத்து மூடிக்கொண்டார். பின்னர் ரித்விகா, spray பயன்படுத்தாதீர்கள் என்று சொன்ன பிறகே ஐஸ்வர்யா spray அடிப்பதை நிறுத்தினார்.

ஐஸ்வர்யா செய்தது தவறு என்று அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் ஐஸ்வர்யா, விஜி கண்களில் volini spray வை அடித்த காட்சிகள் ஹாட் ஸ்டாரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள விஜயலட்சுமியின் கணவர் ஹாட்ஸ்டாரில் ஐஸ்வர்யா spray அடிப்பதை கட்சியை பதிவிட்டுள்ளார். பிக் பாஸ் எப்போதும் ஐஸ்வர்யாவிற்கு ஆதரவாக தான் செயல்படுகிறார் என்பதற்கு இதைவிட ஆதாரம் ஒன்றும் தேவையில்லை.