விக்ரமனுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் பேசி இருக்கும் வீடியோ வைரலாகிவரும் நிலையில் தற்போது விக்ரமனுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தை ட்விட்டரில் ஆதரவு தெரிவித்து வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 83 நாட்களை கடந்து இருக்கிறது. மேலும், இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ஜனனி, ராம், ஆயிஷா, தனலட்சுமி ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். தற்போது 9 பேர் மட்டும் விளையாடி வருகின்றனர்.
Thirumavalavan supporting openly for #Vikraman 🥺🥺
— Vidya Suganya (@Vidya_Suganya) December 27, 2022
The real Political Game raa idhu 💯💯#Kamal – #Vikraman bonding getting exposed now 😲. #VCK party members now vote for Vikraman#Azeem plz get eliminate from this show, No use to play here#BiggBossTamil6 #biggbosstamil pic.twitter.com/6TSEQkRjOr
இந்த சீசனில் பல பரிட்சியமான முகங்கள் கலந்துகொண்டாலும் தமிழ் பிக் பாஸ் வரலாற்றில் முதன் முறையாக ஒரு கட்சியின் உறுப்பினரும் ஜார்னலிஸ்டுமான ஒரு நபர் கலந்துகொண்டு இருப்பது இதுவே முதல் முறை. அவர் தான் விக்ரமன். தொடக்கத்தில் இவருக்கு அதிகமான ரசிகர் பட்டாளம் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். டாஸ்க்கிலும் குறைவான பங்களிப்பே கொடுத்து வந்தார்.
மக்கள் மனதில் இடம்பிடித்த விக்ரமன் :
ஆனால் போக போக தான் எதற்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்தாரோ அதை சரியாக செய்து கொண்டிருக்கிறார். மற்ற போட்டியாளர்களை போல செய்து நியத்திற்கு எதிராக யாராவது பேசினால் அவர்களை எதிர்த்து குரல் கொடுக்கிறார். அதே போல பெண்கள், திரு நங்கைகள், சாதி வெறி போன்றவற்றிக்கு வெளியில் குரல் கொடுத்த விக்ரமன் பிக் பாஸ் வந்த பிறகும் அந்த வேலையை சரியாக செய்து வருகிறார்.
விக்ரமனின் அம்பேத்கர் கடிதம் :
அதே போல காண காணும் காலங்கள் டாஸ்கிலும் விக்ரமன் சட்டமேதை அம்பேத்கர் அவர்களுக்கு கடிதம் ஓன்று அந்த டாஸ்கில் எழுதியிருந்தார். ஆனால் அதனை பிக் பாஸ் குழு 1 மணிநேர நிகழ்ச்சியில் இருந்தும் 24 மணிநேர நிகழ்ச்சியில் இருந்தும் நீக்கி விட்டது. ஆனால் ரசிகர்கள் விஜய் டிவிக்கு கொடுத்த நெருக்கடியால் அடுத்தநாள் விக்ரமன் பேசிய காட்டப்பட்டது. அதோடு கமல்ஹாசனும் காந்திக்கு கடிதம் எழுதி பேசியிருந்தார்.அப்போது அவர் கண் கலங்கினார்.
விக்ரமனை பாராட்டிய திருமா :
இந்த நிலையில் விடுதலை கட்சிகளில் தலைவரான திருமா விக்ரமனை பாராட்டி ஒரு பேட்டியில் பேசியிருந்தார். அப்போது விக்ரம் என்னிடம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அழைக்கிறார்கள் செல்லட்டுமா என்று கேட்டிருந்தார். நான் அவரை மகிழ்ச்சியோடு வழியனுப்பி வைத்திருந்தேன். பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்க எனக்கு நேரமில்லை, ஆனால் நம்முடைய நண்பர்கள் வீடியோ பதிவுகளை அனுப்புவார்கள். அதி பார்த்துதான் உள்ளே விக்ரமன் என்ன செய்கிறார் என்று தெரிந்து கொள்வதாகவும் கூறியிருந்தார்.
அதரவு திரட்டும் விசிக :
மேலும் விக்ரமன் தான் ஒரு அரசியல் வாதி என்பதை எந்த இடத்திலும் மறைக்கவில்லை. தான் ஒரு விடுதலை கட்சியை சேர்ந்தவர் என்பதையும் பெரியார் மற்றும் அம்பேதக்கர் கருத்துக்களை தொடர்ந்து சொல்லி வருகிறார். அவரை நினைத்தால் எனக்கு பெருமையாக இருக்கிறது என்று கூறியிருந்தார், மேலும் தன்னுடைய தோழர்கள் அவருக்கு வாக்களித்து வருவதாகவும் கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் விக்ரமனுக்கு ஆதரவாக விடுதிலை சிறுத்தை கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் ஆதரவு திரட்டி வருகின்றனர்.