பொண்ணுங்க பசங்களுக்கு 6 Pack வேணும்னு எதிர்பார்க்கிறது இல்ல, அது மாதிரி தான் – நிக்சனுக்கு ஆதரவாக பேசி வாங்கிக்கட்டிக்கொண்ட அனன்யா.

0
532
Ananya
- Advertisement -

தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 102 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணி மா சீசனில் ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம், அன்னயா, ரவீனா, விசித்திரா, பூர்ணிமா ரவி ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். இன்னும் இந்த நிகழ்ச்சி சில நாட்கள் தான் இருக்கிறது. இதில் யார் டைட்டில் பட்டதை வெற்றி பெறுவார்கள்? என்று ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த வாரம் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் உடைய கடைசி வாரம் என்று சொல்லலாம்.

- Advertisement -

பிக் பாஸ் 7:

தற்போது பிக் பாஸ் வீட்டில் விஷ்ணு, மாயா, விஜய் வர்மா, மணி, தினேஷ், அர்ச்சனா ஆகிய ஆறு பேர் இருக்கிறார்கள். இதில் நேற்று மிட் வீக் எவிஷனில் விஜய் வர்மா வெளியேறி இருக்கிறார். மேலும், ஓரிரு நாட்களில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் ரீஎன்ட்ரி கொடுத்திருக்கிறார்கள். அந்த வகையில் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த வினுஷா தேவி தன்னை உருவகேலி செய்த நிக்சனை வெளுத்து வாங்கி இருந்தார்.

பூர்ணிமா-அனன்யா உரையாடல்:

வினுஷா உள்ளே சென்றதில் இருந்தே அவரிடத்தில் பலரும் பேசியது நிக்சன் குறித்து தான். அதிலும் மாயா & கோ தான் நிக்சன் பேசியது வெறும் ஜோக் தான் என்பது போல தற்போதும் நிக்சனுக்கு முட்டு கொடுத்தனர். அதிலும் நிக்சன் பேசியது எந்த வித தவறும் இல்லை என்பது போல பூர்ணிமா, வினுஷாவிடம் முட்டு கொடுத்தார். அந்த வகையில் நிக்சனுக்கு அதாரவாக பேசி வினுஷாவிடம் வாங்கி கட்டி இருக்கிறார் அனன்யா.

-விளம்பரம்-

கழுவி ஊற்றும் ரசிகர்கள் :

அப்போது வினுஷாவிடம் பெண்கள் எல்லாம் ஒரு பையன் 6 pack வச்சிக்கிட்டு இருந்தா நல்ல இருக்கும்னு நெனைக்கிறது இல்லையா அப்படி தான் நிக்சனும் பேசிட்டான், இது நார்மல் தானே என்று நிக்சனுக்கு முட்டு கொடுத்தார். இதற்க்கு வினுஷா, அப்படி ஒரு பொண்ணு பேசினாலும் பையன் பேசினாலும் தப்பு தான், அந்த நெனப்பே தப்பு தான் என்று பதிலடி கொடுத்துள்ளார். அன்னன்யாவின் இந்த பேச்சை கேட்டு பலரும் அவரை கழுவி ஊற்றி வருகின்றனர்.

நிக்சன்-வினுஷா உரையாடல்:

பின் நிக்சனிடம் இது தொடர்பாக வினுஷா பேசிய பொது நான் பேசியதை வெளியே தப்பாக பரப்பி இருக்கிறார்கள். அதனால் மன்னிப்பு கேட்டுகிறேன் என்று கூறினார். உடனே கடுப்பான வினுசா, வெளியில் தப்பாக காட்டப்பட்டுள்ளதால் நீ மன்னிப்பு கேட்கிறாய் என்றால் அந்த மன்னிப்பை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். நீ பேசியது தவறு என்று உணர்ந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே ஏற்றுக் கொள்வேன் என்று பேசி இருக்கிறார்.

Advertisement