உன் மூஞ்சே சரியில்ல போ – அர்ச்சனாவை சீண்டிய விஷ்ணு, வெளுத்து வாங்கிய அர்ச்சனா. இதோ வீடியோ.

0
212
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி 59 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

இதுவரை இதில் அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, பிராவோ, அக்ஷ்யா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்து அனல் பறந்து கொண்டு சென்றிருக்கிறது. கடந்த வாரம் பூகம்பம் டாஸ்க் நடந்தது. அதில் இரண்டு டாஸ்கில் தோற்று ஒன்றில் தான் போட்டியாளர்கள் வெற்றி பெற்றார்கள். இதனால் விஜய் வர்மா, அனன்யா பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி ஆகி இருக்கிறார்கள்.

- Advertisement -

பிக் பாஸ் 7:

மேலும், இந்த வாரத்திற்கு கேப்டன் தேர்வு நடைபெற்ற போதில் இருந்து விஷ்ணு உடைய செயல்களில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. அதிலும் நிக்சன் கேப்டன் ஆனதை அடுத்து விஷ்ணுவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால் இவர் பல இடங்களில் தன்னுடைய கோபத்தை காண்பித்து இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் இன்று பிக் பாஸ் வீட்டில் காலை ஆக்டிவிட்டி நடந்திருக்கிறது. அதில் போட்டியாளர்கள் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார்கள். அப்போது விஷ்ணு, வீட்டில் அஞ்சலி பாப்பா மாதிரி திரிகிறார்கள் என்று அர்ச்சனாவே டார்கெட் செய்து பேசி இருக்கிறார்.

விஷ்ணு செய்த செயல்:

அதற்கு பின் டாஸ்க் முடிந்து கிச்சனுக்கு வந்த ஸ்மால் பாஸ் வீட்டார் காலை உணவை தயாரிக்கும் வேலையில் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது காலையில் தன்னை தாக்கி பேசியது குறித்து அர்ச்சனா விஷ்ணுவிடம் கேள்வி எழுப்பி இருக்கிறார். வழக்கம்போல் விஷ்ணு கோபப்பட்டு கத்துகிறார். பதிலுக்கு அர்ச்சனாவும் விடாமல் பேசி இருக்கிறார். ஒட்டுமொத்த பிக் பாஸ் வீடு அமைதியாக இவர்களின் சண்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. கோபத்தின் உச்சத்திற்கு சென்ற விஷ்ணு, கையை வீசி பளார் பளார் அடிப்பேன் என்று கூறினார்.

-விளம்பரம்-

கோபத்தில் அர்ச்சனா:

அதைக் கேட்டு ஆவேசம் அடைந்த அர்ச்சனா, அடிங்க அடிங்க என்று விஷ்ணு அருகில் சென்று இருக்கிறார். இதனால் வீடு கலவரத்தில் இருக்கிறது. இன்னொரு பக்கம் பிக் பாஸ் வீட்டில் இருந்த விசித்ரா, கிட்சன் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு அர்ச்சனாவை பற்றி மாயா, பூர்ணிமாவிடம் குறை கூறி இருக்கிறார். அதில் அவர், அர்ச்சனாவுக்கு வேலையே தெரியாது. அதற்கு அவர் சொல்லும் காரணங்கள் தான் ஏற்றுக் கொள்ள கோபத்தில் அர்ச்சனா:என்றெல்லாம் பேசி இருக்கிறார். இதற்கிடையில் அந்த பக்கம் அர்ச்சனா வருகிறார். அப்போது அர்ச்சனா நீ செய்தது தவறு என்று விசித்திரா கூறுகிறார்.

அர்ச்சனா-விசித்திரா வாக்குவாதம்:

இதைக் கேட்டு அர்ச்சனா, மேடம் உங்களுக்கு இது நடந்திருந்தால் இப்படித்தான் பேசுவீங்களா? என்று கோபப்பட்டு அவரிடமும் மூஞ்சி காட்டுகிறார். பின் அருகில் இருந்த கூல் சுரேஷ், இப்போதாம்மா நீ சரியா பேசுற என்று அர்ச்சனாவை பாராட்டினார். நான் அழப்போவதில்லை, என்னை அழ வைக்க தான் இந்த விவகாரம் நடக்கிறது என்றெல்லாம் விக்ரமிடம் பேசுகிறார் அர்ச்சனா. அதுமட்டுமில்லாமல் நேற்று கூட அர்ச்சனாவை விஷ்ணு வேண்டும் என்று வம்பு இழுத்திருக்கிறார். இதையெல்லாம் பார்த்த தினேஷ், யாரு லோவா இருக்கிறார்களோ அவர்களை தான் விஷ்ணு டார்கெட் செய்கிறார். நம்மை மாதிரி ஸ்ட்ராங்கான ஆளுங்க கிட்ட அவன் விளையாட வரமாட்டுகிறான் என்று கூறி இருக்கிறார்.

Advertisement