கவின் வெளியேறியதால் இறுதி நாளில் ஏற்படும் மாற்றம்.! ஒட்டிங்கில் இவர் தான் முதல் இடம்.!

0
19313
kavin

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் கவின் வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில தினங்களே இருக்கும் நிலையில் கவின் பிக்பாஸ் கொடுத்த 5 லட்சத்தை பெற்றுக்கொண்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இறுதி வாரம் என்பதால் இந்த வாரம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்த முகெனை தவிர அனைவரும் நாமினேட் ஆகி இருந்தனர்.

Bigg-Boss

மேலும் இந்த வாரம் நடைபெற்ற இந்த ஒட்டிங்கில் வழக்கம்போல கவின் தான் அதிக வாக்குகளை பெற்று முதலிடத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் கவின் வெளியேறி இருப்பதால் இந்த வாரம் யார் வெளியேற போகிறார் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் பல்வேறு வலைதளங்களில் நடத்தப்பட்டுவரும் ஓட்டில் லாஸ்லியா தான் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தில் இருக்கிறார். மேலும், ஷெரீனுக்கு மிகவும் குறைவான வாக்குகள் விழுந்து வருகிறது.

இதையும் பாருங்க : ரகுல் ப்ரீத் சிங் பதிவிட்ட புகைப்படம்.! சமந்தா கமெண்டை கலாய்க்கும் நெட்டிசன்கள்.!

- Advertisement -

கவின் வெளியேறியதால் கவின் ரசிகர்களின் ஆதரவு அனைத்தும் தற்போது சாண்டி மற்றும் லாஸ்லியாவிற்கு தான் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது .ஆனால், தற்போது நடைபெற்று வரும் ஓட்டிங்கை வைத்து பார்க்கும்போது சாண்டியை விட லாஸ்லியாவை ரசிகர்கள் காப்பாற்ற விரும்புகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. எனவே , இந்த வாரம் கண்டிப்பாக லாஸ்லியா வெளியேற மாட்டார் என்பது மட்டும் உறுதி.

-விளம்பரம்-

மேலும், இறுதி இரண்டு இடத்தில் தர்ஷன் மற்றும் ஷெரின் தான் இருந்து வருகின்றனர். இருப்பினும் ஷெரினா, தர்ஷனா என்று பார்க்கும் போது கண்டிப்பாக ரசிகர்கள் தர்ஷனை காப்பற்றி விடுவார்கள் என்பது மாட்டும் உறுதி. எனவே, இந்த வாரம் ஷெரின் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement