இத்தனை வாரங்கள் கழித்து பிக் பாஸ் ஒட்டிங் ஆர்டரில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம் – மாயாவை காப்பாற்ற இப்படி ஒரு தந்திரமா?

0
573
- Advertisement -

தமிழில் விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 85 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம் ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

தற்போது நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி செல்வதால் அனல் பறந்து கொண்டு இருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் பரீட்சயமான நபர்களில் மாயாவும் ஒருவர். இவர் கடந்த ஆண்டு கமல் நடிப்பில் வெளியாகியிருந்த விக்ரம் படத்தில் நடித்திருந்தார். அது மட்டும் இல்லாமல் இவர் சில படங்களிலும் நடித்திருக்கிறார். இருந்தாலும், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார்.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மாயா:

இவர் நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்து மற்ற போட்டியாளர்களிடமும் சண்டை, சச்சரவில் ஈடுபட்டிருக்கிறார். குறிப்பாக, இவர் பூர்ணிமாவுடன் கேங் சேர்ந்து கொண்டு செய்யும் அட்ராசிட்டிக்கு அளவே இல்லை. அதனால இவரை புள்ளிகேங்க் என்று தான் அழைக்கிறார்கள். மேலும், அதிகமா அர்ச்சனா, விசித்ரா போன்றவர்களிடம் தான் மாயா சண்டைக்கு சென்றிருக்கிறார். இதனால் பலமுறை கமல் மாயாவை கண்டித்தும் இருக்கிறார். குறிப்பாக, பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்டதற்கு முக்கிய காரணமே மாயா தான்.

மாயா செய்த வேலை:

நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்தே பிரதீப்பை குறித்து மாயா தப்பு தப்பாக பேசி இருக்கிறார். திட்டம் போட்டு தான் பிரதீப்பை மாயா வெளியேற்றி இருந்தார். இதற்கு பலருமே மாயாவை கண்டித்து பேசி இருந்தார்கள். மேலும், கடந்த வாரம் நடந்த ப்ரீஸ் டாஸ்க் சுற்றில் உறவினர்கள் அனைவரும் பிக் பாஸ் வீட்டிற்கு வந்த போது பலரிடம் மாயா மன்னிப்பு கேட்டிருந்தார். அதில் சரவணன் விக்ரம் தங்கை, மாயாவிடம் பேசாதே அவரை விட்டு விலகு என்றெல்லாம் அறிவுரை கூறியிருந்தார். இப்படி இருக்கும் நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேட் பட்டியல் வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த வாரம் நாமினேட் பட்டியல்:

இந்த வாரம் மாயா, நிக்சன், தினேஷ், மணிகண்டன், விஷ்ணு, விஜய் வர்மா, ரவீனா ஆகியோர் நாமினேட் ஆகி இருக்கிறார்கள். பொதுவாகவே ரசிகர்கள் எதிர்பார்க்கும் நபர்கள் நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவதில்லை. காரணம், அவர்கள் கண்டன்ட் கொடுக்கிறார்கள், நிகழ்ச்சியை பற்றி அதிகமாக பேச வைக்கிறார்கள் என்றெல்லாம் கூறி அவர்களை வெளியேற்றுவதில்லை. அந்த வகையில் மாயாவும் நிறைய முறை நாமினேட் ஆகியிருக்கிறார். ரசிகர்களும் மாயா வெளியேற வேண்டும் என்றெல்லாம் கூறியிருக்கிறார்கள்.

விஜய் டிவி செய்த வேலை:

ஆனால், அவரை பிக் பாஸ் வெளியேற்றவில்லை. குறிப்பாக கமலுடைய ஆதரவால் தான் மாயா இன்னும் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல் நாமினேட் பட்டியல் எப்போதுமே அல்பாபெட்டிக் ஆர்டரில் தான் இருக்கும். ஆனால், இந்த முறை மாயாவின் பெயர் முதல் இடத்தில் இருக்கிறது. முதலிடத்தில் இருந்தால் வாக்களிப்பவர்கள் முன்னாடி இருப்பவர்களுக்கு தான் முன்னுரிமை கொடுப்பார்கள். அதனால் மாயாவிற்கு அதிக ஓட்டுகள் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் விஜய் டிவி தரப்பில் செய்யப்பட்டிருக்கிறது. விஜய் டிவியும் மாயாவை தான் காப்பாற்ற நினைக்கிறது. இது ரொம்ப ரொம்ப தவறு என்றெல்லாம் நெட்டிசன்கள் விமர்சித்து பதிவிட்டு வருகிறார்கள்.

Advertisement