அடுத்த வைல்டு கார்டு போட்டியாளர் இவரா.! மீராவிற்கு அடிக்கபட்ட ஆப்பு.!

0
12231
Meera-Mithun
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசனில் அனைவராலும் எடுக்கப்பட்டவர் வனிதா தான் ஆனால் நேற்றைய நிகழ்ச்சியில் வனிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இரண்டாம் போட்டியாளராக வெளியேறி இருந்தார் வனிதா சென்றது பெரும்பாலான ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் ஒரு சில ரசிகர்கள் வனிதா சென்றுவிட்டால் நிகழ்ச்சியில் சண்டையும் இருக்காது சுவாரஸ்யமும் இருக்காது என்று மிகவும் வருத்தப்பட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-
Meera-Mithun In Jodi

அதேபோல வனிதா சென்ற பிறகு அடுத்த வனிதா யார் என்ற ஒரு மிகப் பெரிய கேள்வியே பிக்பாஸ் வீட்டில் எழுந்துள்ளது. அந்த வகையில் நேற்றைய நிகழ்ச்சியில் கவின் வனிதா சென்று விட்டதால் இனி சண்டை இருக்காது என்று கூறியிருந்தார். அப்போது பேசிய மீரா மிதுன் நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் இனி யாராக இருந்தாலும் நாக்கை பிடிங்கிக்கர மாதரி பச்சை பச்சையாக கேட்பேன், நான் இனி வயசு வித்தியாசம் கூட பார்க்க மாட்டேன். ஒரு எல்லை தாண்டி போச்சு என்றால் நான் வாயை திறந்தாள் அவ்வளவு தான் என்று கூறியிருந்தார்.

- Advertisement -

நேற்றைய நிகழ்ச்சியில் மீரா பேசியது அனைவருக்கும் கொஞ்சம் கடுப்பாக தான் இருந்தது. வனிதா இல்லாமல் மீரா இந்த அளவிற்கு எகுறுகிறார் என்ற எண்ணம் கூட தோன்றியது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ல்டு கார்ட் என்ட்ரியாக பிரபல நடிகை சங்கீதா வரபோவதாக சில செய்திகள் வெளியாகியுள்ளன. அவர் மட்டும் வந்துவிட்டால் மீரா மிதுனின் ஆட்டம் முழுவதும் அடங்கிவிடும் என்பதில் துளியளவும் ஐயமில்லை.

அதற்கு முக்கிய காரணமே, மீரா மிதுன் ஏற்கனவே விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 சீசன் 8 நிகழ்ச்சியை போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். அப்போது மீரா மிதுன் மாடல் அழகி பட்டம் கூட வெல்லவில்லை. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போது இவருக்கும், அந்த நிகழ்ச்சியின் நடுவராக இருந்த சங்கீதாவிற்கும் வாக்குவாதம் ஏற்பட மீரா மிதுனை கெட் லாஸ்ட் என்று திட்டுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வளையதலத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-

வனிதா இருந்தவரை இருந்த இடம் தெரியாமல் இருந்த மீரா மிதுன் வனிதா சென்ற பிறகு ஓவராக சவுண்டு விட்டு வருகிறார் இந்த நிலையில் சங்கீதா போட்டியாளராக உள்ளே நுழைந்தாள் அவர் மீரா மீது நீர் ஆட்டத்தை நிச்சயம் அடக்குவார் என்பதில் துளியளவும் சந்தேகம் இல்லை இது குறித்த மேலும் சில தகவல்களை விரைவில் நமது பக்கத்தில் அப்டேட் செய்கிறோம் அதுவரை காத்திருங்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement