உள்ளே சென்றதும் சுசித்ராவை வைத்து வேலையை ஆரம்பித்த பிக் பாஸ்.

0
6086
suchithra
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வெற்றிகரமானநிறைவு செய்ய இருக்கிறது. இந்த நான்கு வாரத்தில் அன்பு, சண்டை, கொஞ்சம் ரொமான்ஸ், புது புது உறவுகள் பல பஞ்சாயத்துக்கள் அரங்கேறி இருந்தது. நாளுக்கு நாள் பிக் பாஸின் சுவாரசியம் கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது..இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் ஷிவானி, அர்ச்சனா, ஆரி, கேப்ரில்லா, சம்யுக்தா ஆகிய 5 பெயரை தவிர பாலாஜி, சோம் சேகர், நிஷா, ரம்யா பாண்டியன், ரியோ, வேல் முருகன், சுரேஷ், அனிதா, ஜித்தன் ரமேஷ், ஆஜித்,சனம் ஆகிய 11 பேரும் இந்த வாரம் நாமினேஷனில் இடம்பெற்றுள்ளனர்.

-விளம்பரம்-

இதனால் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்பதற்கான போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.நேற்றய நிகழ்ச்சியில் இந்த பதினோரு பேரில் சனம் ஷெட்டி, ரியோ, ஜித்தன் ரமேஷ், அனிதா சம்பத், ரம்யா பாண்டியன் பாலாஜி முருகதாஸ் என்று ஆறு பேரை கமல் இந்த வாரம் காப்பாற்றப் பட்டு விட்டதாக அறிவித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் வேல்முருகன் வெளியேற்றப்பட்டதாக ஒரு தகவலும் வெளியானது.

- Advertisement -

இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோவில், பிக் பாஸ் வீட்டின் இரண்டாவது போட்டியாளராக சுசித்ரா நுழைந்து இருக்கிறார். பொதுவாக வைல்ட் கார்ட் போட்டியாளர் உள்ளே நுழைந்த பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி கொஞ்சம் சூடு பிடிக்கும். ஆனால் அர்ச்சனா வைல்ட் கார்ட் போட்டியாளரராக உள்ளே நுழைந்த பின்னர் அப்படி எதுவும் பெரிய சம்பவம் நடக்கவில்லை. சுச்சி என்ட்ரிக்கு பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பின்னணி பாடகியான சுசித்ரா தமிழில் எண்ணற்ற பாடல்களை பாடி இருக்கிறார் ஆனால் இவர் மிகப்பெரிய பிரபலமடைந்தது என்னவோ சுச்சிலீக்ஸ் மூலம்தான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சமூக வலைத்தளத்தில் சுச்சிலீக்ஸ் என்ற பெயரில் தமிழ் சினிமாவில் இருக்கும் எண்ணற்ற பிரபலங்களின் ஆபாச படங்களை பதிவிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார் சுசித்ரா. ஆனால் இது குறித்து விளக்கமளித்த அவர் தன்னுடைய ஆக்கவுண்ட் யாரோ ஹேக் செய்து விட்டார்கள் என்றும் தான் எந்த பிரபலங்களில் ஆபாச புகைப்படங்களை வெளியிட இல்லை என்றும் தனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கூறியிருந்தார் சுசித்ரா.

-விளம்பரம்-
Advertisement