பிக் பாஸ் பட்டம், 78 நாள் சம்பளம், இரண்டு போனஸ் பரிசு – அர்ச்சனா சம்பாதித்த மொத்த பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?

0
434
- Advertisement -

பிக் பாஸ் பட்டத்தை வென்ற அர்ச்சனாவிற்கு கிடைத்த பரிசுகள் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சியின் பைனல் நேற்று கோலாகலமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணி மா சீசனில் ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம், அன்னயா, ரவீனா, விசித்திரா, பூர்ணிமா ரவி ஆகியோர் வெளியேறி இருந்தனர்.

-விளம்பரம்-

இறுதியில் இறுதி போட்டிக்கு பிக் பாஸ் வீட்டில் விஷ்ணு, மாயா, மணி, தினேஷ், அர்ச்சனா ஆகிய ஐந்து பேர்தகுதி பெற்று இருந்தனர். இதில் Ticket To Finale மூலம் விஷ்ணு ஏற்கனவே பைனலுக்கு தகுதி பெற்று இருந்தார் என்பது குறிப்பிடதக்கது. இந்த சீசனில் ஏகப்பட்ட wild Card போட்டியாளர்கள் நுழைந்து இருந்தனர். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக நுழைந்தவர் அர்ச்சனா.

- Advertisement -

பிக் பாஸ் 7:

நிகழ்ச்சி ஆரம்பத்தில் இவர் அழுது கொண்டே இருந்தார். இதனாலே இவரை போட்டியாளர்கள் பலருமே விமர்சித்தும் கிண்டல் செய்தும் இருந்தார்கள். முதன்முதலாக அர்ச்சனா, கோபம் தாங்காமல் மாயா புள்ளி கேங்க்குடன் தான் சண்டை போட ஆரம்பித்தார். மொத்த வீடுமே அர்ச்சனாவிற்கு எதிராக திரும்பும் போது அர்ச்சனா தைரியமாக எதிர்த்து நின்று பேசி இருந்தார். இதனால் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமானது.

அர்ச்சனாவின் பயணம் :

பின் பிரதீப்பிற்கு எதிராக பலருமே குரல் கொடுத்த போது அர்ச்சனா அவருக்கு ஆதரவாக நின்றிருந்தார். ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பும்போதும் கூட பிரதீப்பிற்கு வாய்ப்பு கொடுங்கள் என்று அர்ச்சனா கேட்டிருந்தார். இதனாலே பிரதிப் ரசிகர்களும் அர்ச்சனாவிற்கு ஆதரவாக இருந்தார்கள். அதற்குப்பின் எல்லா விளையாட்டிலும் அர்ச்சனா திறமையாக விளையாடி வந்தார். இதை பார்த்த மற்ற போட்டியாளர்களும் அர்ச்சனாவை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்றெல்லாம் திட்டம் போட்டார்கள்.

-விளம்பரம்-

குறிப்பாக, மாயா கேங்க் அர்ச்சனாவை தோற்கடிக்க பல சதிவேலைகள் செய்திருந்தார்கள். இப்படி நாளுக்கு நாள் அர்ச்சனா உடைய செயலால் அவருடைய ரசிகர் பட்டாளம் அதிகமாகி கொண்டே இருந்தது. அனைவரும் எதிர்பார்த்த படி அர்ச்சனா பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் ஆகியிருக்கிறார். இதுவரை வந்த சீசன்களிலேயே வைல்ட் கார்ட் போட்டியளராக நுழைந்து டைட்டில் பட்டதை வென்ற முதல் போட்டியாளர் என்ற பெருமையை அர்ச்சனா தட்டிச் சென்றிருக்கிறார்.

அர்ச்சனாவிற்கு கிடைத்த பரிசுகள் :

மொத்தம் 106 நாட்களில் இருந்து 28 நாட்கள் போக 78 நாட்கள் அர்ச்சனா பிக் பாஸ் வீட்டில் இருந்து இருக்கிறார். ஏற்கனவே பூரணிமா 16 லட்சம் ரூபாய் எடுத்துச் சென்றுவிட்டார். அது போக 34 லட்சம் இருக்கிறது. ஒரு நாளைக்கு அர்ச்சனாவுக்கு 15000 ரூபாய் வழங்கப்பட்டு இருக்கிறது. 78*15000=1170000. ஆக மொத்தம், 3400000+1170000=4570000 ரூபாய் சம்பளத்தை பெற்று இருக்கிறார் அர்ச்சனா. இதுமட்டுமல்லாது G -Square சார்பில் 15 லட்ச ருபாய் மதிப்புள்ள ஒரு Flat மற்றும் 10 லட்சம் மதிப்புள்ள Maruthi Grand Vitara காரும் அர்ச்சனாவிற்கு பரிசாக வழங்கப்பட்டு இருக்கிறது.

Advertisement