பிக் பாஸ் பட்டத்தை வென்றது இவர் தான்.! ட்வீட் செய்த டாப் 10 சுரேஷ்.! இவர் சொன்னா சரியா தான இருக்கும்.!

0
49976
Bigg-Boss-winner
- Advertisement -

தமிழில் விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழக மக்களிடையே அதிக வரவேற்பையும் ஆதரவையும் பெற்று வருகிறது. விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக இறுதி கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி.மேலும்,டைட்டில் வின்னர் யார் ?என்று பல எதிர்பார்ப்புகளுடன் மக்கள் ஆவலாக உள்ளார்கள்.மேலும், கமல்ஹாசன் அவர்கள் நிகழ்ச்சி தொடக்கத்தில் எப்போதும் எதிர்பார்க்காத விஷயமும் நடக்கலாம் என்று அவர் கூறியது போலவே நடந்து கொண்டு இருக்கிறது என்று ரசிகர்கள் கூறினார்கள். பிக் பாஸ் என்றாலே அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது 100 நாட்கள்,சுற்றி கேமராக்கள், போட்டியாளர்கள் மற்றும் எந்த ஒரு தகவல் தொடர்போ,வெளியிலிருந்து நேர்முக நட்போ இல்லாமல் இருப்பது. மேலும், இந்த பிக்பாஸ் வீடு எப்போதும் சண்டைகள், பிரச்சினைகள், காதல், நட்பு என அனைத்து விஷயங்களையும் கொண்டுள்ளது.

-விளம்பரம்-

மேலும், பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி எந்த அளவிற்கு மக்களிடையே வரவேற்பை பெற்றதோ அதைவிட அதிகமாக பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி போய்க் கொண்டிருக்கிறது.ஆனால், நடுவுல பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி கொஞ்சம் சொதப்பலாக இருந்தாலும் எல்லாத்தையும் தட்டி தூக்கிவிட்டது பிக்பாஸ் நிகழ்ச்சி 3.பிக் பாஸ் என்றாலே அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது ஓவியாதான்.ஆனால்,தற்போது அந்த எண்ணத்தை முறியடித்து போய் கொண்டிருக்குது பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி.அதுமட்டுமில்லாமல் ஓரிரு நாட்களில் பிக் பாஸ் சீசன் 3ன் டைட்டில் வின்னர் யார்? என்று தெரிந்து விடும்.

இதையும் பாருங்க : இந்தியன் 2-வில் தர்ஷன் இல்லை.! கமல் தயாரிப்பில் நடிக்கப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா ?

- Advertisement -

இதை ஆர்வத்துடனும் ஆவலுடனும் தமிழக மக்கள் எதிர் நோக்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் பிரபல செய்தி வாசிப்பாளரும் டாப் 10 தொகுப்பாளருமான சுரேஷ் முகென் தான் வின்னர் என்று குறிப்பிட்டிருந்தார். இதனால் ரசிகர்கள் உற்சாகமாக இருந்தனர். மேலும், இந்த தகவலை சமூக வலைத்தளங்களில் அதிகமாக சேர் செய்து கொண்டு வருகின்றனர் ரசிகர்கள். உண்மையிலேயே முகின் தான் பிக்பாஸ் டைட்டில் வின்னர் வாங்குவதற்கு 100% தகுதியானவர் என்றும் பேசப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் தர்ஷன் தான் இறுதி கட்ட போட்டியாளராக சென்று டைட்டில் வின்னர் ஆக கூடிய வாய்ப்புள்ளது என்று ஆரம்பத்திலிருந்தே மக்களாலும், பிக்பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்கள் அனைவரும் பேசப்பட்டு வந்த விஷயம்.மேலும், மக்கள் அனைவரும் எதிர்பார்த்திருந்தது தர்ஷன் தான் இந்த பிக் பாஸ் சீசன் 3ன் வின்னர். ஆனால், மலையே புரட்டிப் போடும் அளவிற்கு கடந்த வாரம் எலிமினேட் இருந்தது. தர்ஷன் வெளியேறியதைத் தொடர்ந்து பல கேள்விகள், பல குமுறல்கள் சமூக வலைதளங்களில் எழுந்த வண்ணம் உள்ளன.

-விளம்பரம்-
Mugen

மேலும், பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் சாண்டி,முகென் , லாஸ்லியா, ஷெரின். இவர்கள் நான்கு பேரில் யார்? பிக்பாஸ் வீட்டின் டைட்டில் வின்னர் ஆகப் போகிறார் என்று பல கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர் பிக்பாஸ் ரசிகர்கள். மேலும், தற்போது இணையங்களில் பிக் பாஸ் வின்னர் குறித்து தகவல்தான் ட்ரெண்டியாக போய்க் கொண்டுள்ளது.இதில் மக்கள் அந்த நாலு பேருக்கும் ஓட்டுகளை குவித்துக்கொண்டு வருகின்றனர். என்னதான் மக்கள் அனைவருக்கும் ஆதரவு அளித்தாலும் ஒருவர் தானே வெற்றி பெறவேண்டும். அது தானே நியதி.

Advertisement