பிக் பாஸ் போய்ட்டு வந்தாலே கொம்பு மொளச்சிறது - வெளுத்து வாங்கிய பிக் பாஸ் 2 போட்டியாளர்.

By Rajkumar · 27/7/2021

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கார் விபத்தில் சிக்கிய யாஷிகா தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் சென்னை, மாமல்லபுரம் அருகே நடந்த கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயகங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழில் துருவங்கள் 16, கவலை வேண்டாம் போன்ற படங்களில் நடித்த யாஷிகா, பின்னர் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பிரபலமடைந்தார். அதன் பின்னர் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றார்.

https://www.youtube.com/watch?v=_Hx7Ir3lCO8&t=17s

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது.சமீபத்தில் நடிகை யாஷிகா தனது காரில் தனது இரண்டு ஆண் நண்பர்கள் மற்றும் ஒரு பெண் தோழியுடன் பாண்டிச்சேரிக்கு சென்று பின்னர் சென்னை திரும்பியுள்ளார்.மாமல்லபுரத்தில் இருந்து சென்னையை நோக்கி நடிகை யாஷிகா காரில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்பில் மோதி பல்லத்தில் விழந்து உள்ளது.

இதையும் பாருங்க : பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர்களின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா ? முழு விவரம் இதோ.

இதில் முன் சீட்டில் அமர்ந்து இருந்த யாஷிகாவின் தோழி வள்ளி என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.மேலும் யாஷிகா அவரது இரண்டு நண்பர்களும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.அதிவேகமாக கார் ஓட்டியதாகவும், மரணத்தை ஏற்படுத்தியதாகவும் யாஷிகா ஆனந்த் மீது இரண்டு வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

விபத்தை ஏற்படுத்திய யாஷிகா மீது பல விதமான விமர்சனங்களை செய்து வரும் நிலையில் யாஷிகாவுடன் பிக் பாஸில் கலந்து கொண்ட பாலாஜி பேசுகையில், பிக் பாஸ் போய்ட்டு வந்தாலே கொம்பு முலைச்சிறது. எனக்கு அவரின் பெற்றோர்கள் மேல் தான் கோபம்.ஒரு பொம்பள புள்ள நைட் என்ன பண்றா, என்ன செய்கிறார் என்பதை கண்காணிக்க வேண்டும். ஒரு வேலை நான் யாஷிகாவின் அப்பாவாக இருந்தால் நான் சண்டை போட்டு இருப்பேன். கேட்கவில்லை என்றால் வெளியே போய்டுனு தான் சொல்லி இருப்பேன் என்றும் கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full