சிறு வயதில் நான் படித்த செக்** புக்கை என் அம்மா பார்த்துவிட்டு இதை தான் செய்தார் – மிஸ்கின் சொன்ன சுவாரசிய சம்பவம்.

0
3881
Mysskin

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனர்களாக ஜொலித்து வரும் எத்தனையோ பேர் ஆரம்பத்தில் துணை இயக்குனர்களாக பணிபுரிந்தவர்கள் தான். அந்த வகையில் இயக்குனர் மிஷ்கினும் ஒருவர். இயக்குனர் மிஸ்கின் திரைப்பட இயக்குநர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். இவர் முதலில் இயக்குனர் வின்சென்ட் செல்வாவிடம் தான் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். பின் இவர் சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய், முகமூடி, பிசாசு, துப்பறிவாளன் என பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி உள்ளார்.

இந்த நிலையில் உதவி இயக்குனராக இருந்த போது இயக்குனர் மிஸ்கின் விஜய் படத்தில் நடித்துள்ளளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. வின்சன்ட் செல்வா இயக்கத்தில், விஜய் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளியான யூத் படத்தில் மொட்டை தலையுடன் ஒரு சிறு காட்சியில் தோன்றியுள்ளார் மிஸ்கின்.

இதையும் பாருங்க : ஒரு செகண்ட் குஷ்பூனு நெனச்சிட்டோம் – குஷ்பூவின் மகளை கண்டு வியந்து போன ரசிகர்கள்.

- Advertisement -

இதை தொடர்ந்து கதிர் இயக்கத்தில் ரிச்சர்ட் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளியான ‘காதல் வைரஸ் ‘ படத்திலும், 2005 ஆம் ஆண்டு ஜித்தன் ரமேஷ் நடிப்பில் வெளியான ‘ஜித்தன் ‘ படத்திலும் மிஸ்கின் தோன்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மிஸ்கின் இறுதியாக இயக்கிய சைக்கோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மிஸ்கின் படங்களில் மட்டுமல்லாது தனிப்பட்ட வாழ்கையிலும் வித்யாசமான மனிதர் தான். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மிஸ்கின் சிறு வயதில் செக்ஸ் புக் படித்துக்கொண்டு இருக்கும் போது திடீரென்று தன்னுடைய அம்மா வந்துவிட்டதால் அந்த புத்தகத்தை மேஜைக்கு கீழ் போட்டுவிட்டு வந்துவிட்டாராம். பின்னர் சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்து பார்த்தால் அந்த புத்தகத்தின் மேலே அவரது அம்மா எதோ ஒரு பொருளை வைத்து அந்த புத்தகம் பறக்காமல் இருக்காதபடி வைத்துள்ளதை பார்த்து நிகழ்ச்சியடைந்தாராம்.

-விளம்பரம்-
Advertisement