யாஷிகாவின் ஆண் நண்பர் கொடுத்த வாக்கு மூலம் – இவரு யாஷிகாவை லைவில் லிப் லாக் அடிச்சவராசே(அந்த வீடியோ இதோ)

0
3274
yashika

கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை, மாமல்லபுரம் அருகே நடந்த கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயகங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழில் துருவங்கள் 16, கவலை வேண்டாம் போன்ற படங்களில் நடித்த யாஷிகா, பின்னர் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பிரபலமடைந்தார். அதன் பின்னர் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது.இந்த நிலையில் சமீபத்தில் ஏற்பட்ட கார் விபத்தில் இவர் படு காயம் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தில் யாஷிகாவுடன் சென்ற வள்ளி ஷெட்டி பவனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

- Advertisement -

அவர் சீட் பெல்ட் அணியாமல் இருந்ததால் விபத்து நடந்த போது காரில் இருந்து தூக்கி வீசப்பட்டுள்ளார். அதே போல காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்த இரண்டு ஆண் நண்பர்கள் சீட் பெல்ட் அணிந்ததால் உயிர் தப்பியுள்ளனர். இப்படி ஒரு நிலையில் யாஷிகாவின் நண்பர் நிரூப் ஆனந்த குமார் அளித்த தகவலின்படி போலீசார் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர்.

நிரூப் ஆனந்த குமார் விபத்து நடந்த சில மணி நேரத்தில் யாஷிகாவை நேரில் சென்று பார்த்ததாகவும், கார் விபத்து நடந்த இடத்தை சென்று பார்த்ததாகவும் கூறியுள்ளார். மேலும், அவர்கள் பாண்டிச்சேரிக்கு போகவில்லை மாமல்லபுறத்தில் உள்ள ஒரு உணவகத்தில் உணவருந்திவிட்டு திரும்பிய போது தான் விபத்து நேர்ந்துள்ளது என்றும் கூறியுள்ளார். நிரூப் ஆனந்த குமார் வேறு யாரும் இல்லை கடந்த சில வருடங்களுக்கு முன் யாஷிகா, குடி போதையில் பைப்பில் இருந்து லைவ் போட்ட போது யாஷிகாவிற்கு லிப் லாக் கொடுத்தவர் தான் இந்த நிரூப் ஆனந்த குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement