புள்ளைங்கோ தோத்துருவாங்க போல – யாஷிகா பதிவிட்ட கிளாமர் போஸ். ரசிகர்களின் கமெண்டை பாருங்க.

0
2338
yashika

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி எத்தனையோ பேருக்கு பேரும் புகழையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளது. ஆனால், அதில் ஒரு சிலர் மட்டும் தான் சினிமாவில் வாய்ப்புகளை அதிகம் பார்த்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை யாஷிகாவும் ஒருவர். தமிழ் சினிமாவில் தற்போது இளசுகளின் சென்சேஷனல் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை யாஷிகா ஆனந்த் . தமிழில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான கவலை வேண்டாம் படத்தில் அறிமுகமானவர்.

அதன் பின்னர் துருவங்கள் பதினாறு, பாடம் போன்ற படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது 2018 ஆம் ஆண்டு வெளியான இருட்டு-அறையில்-முரட்டு-குத்து என்ற அடல்ட் காமெடி திரைப்படம் தான்.இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த யாஷிகா ஆனந்த், கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் பட்டத்தை வெல்லவில்லை என்றாலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு இளம் ரசிகர்களை கவர்ந்தார். அதற்கு முக்கிய காரணமே அம்மணியின் கவர்ச்சி தான்.இவர் எப்போதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார். அடிக்கடி இவர் தன்னுடைய புகைப்படங்களை சோசியல் மீடியாவில் அப்டேட் செய்து கொண்டு இருப்பார். இவர் பதிவிடும் பெரும்பாலான புகைப்படங்கள் கவர்ச்சி புகைப்படமாக தான் இருக்கும்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதற்கு வழக்கம் போல லைக்ஸ்களும் குவிந்தது. அதில் ரசிகர் ஒருவர் ‘உங்க வீட்லலாம் ஒன்னுமே சொல்ல மாட்டாங்களா’ என்று அட்வைஸ் செய்துள்ளார். அதே போல இன்னொருவர் ‘அது மட்டும் எதுக்கு ‘ என்று கேலி செய்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement