நீச்சல் குளத்தில் செய்த கேவலமான காரியத்தை சொன்ன யாஷிகா. இன்னும் நிறைய இருக்கு.

0
11711
yashika

தமிழ் திரைப்பட உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே இளைசுகளின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் ஒரு பஞ்சாப் மாடல் அழகி ஆவார். இவர் துருவங்கள் பதினாறு என்ற தமிழ் படத்தின் மூலம் தான் சினிமா துறையில் அறிமுகமானார். பின்னர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் மிகப் பெரிய அளவில் பிரபலமானர்.

இவர் நடித்த படங்கள் எல்லாமே ஹாட்டான கவர்ச்சியான கதாபாத்திரங்கள் தான். பின் இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் பட்டத்தை வெல்லவில்லை என்றாலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு இளம் ரசிகர்களை கவர்ந்தார். அதற்கு முக்கிய காரணமே அம்மணியின் கவர்ச்சி தான். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் கூட்டம் உருவாகியது.

- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் இவர் ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த ஜோம்பி படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் எப்போதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார். அடிக்கடி இவர் தன்னுடைய புகைப்படங்களை சோசியல் மீடியாவில் அப்டேட் செய்து கொண்டு இருப்பார்.அந்த வகையில் சமீபத்தில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Never, Ever சேலஞ் கேள்விகளுக்கு பதில் அளித்து இருந்த வீடீயோவை பகிர்ந்துள்ளார். அதில் நீச்சல் குளத்தில் சிறு நீர் கழித்துள்ளீர்களா என்ற கேள்விக்கு ஆம் என்று பதில் அளித்தார்.

அதே போல ஆண்கள் கழிவறைக்கு சென்றுள்ளீர்களா என்ற கேள்விக்கும் ஆம் என்று பதில் அளித்தார். இதைனை கண்ட ரசிகர்களில் சிலர், ஆண்கள் கழிவறைக்கு போய் என்ன பன்னீர்கள் என்று கேட்டதற்கு, ஒரு முறை அமெரிக்காவில் இருந்த போது பெண்கள் கழிவறையில் கூட்டமாக இருந்ததால் ஆண்கள் கழிவறைக்குள் ஓடிவிட்டேன் என்று கூறியுள்ளார். மேலும், நீச்சல் குளத்தில் சிறு நீர் கழித்தீர்களா என்று வேறு ஒரு ரசிகர் கேட்டதற்கு, ஆம், எனக்கு ஒரு 10 வயது இருக்கும் போது செய்தேன் என்று கூறியுள்ளார் யாஷிகா.

-விளம்பரம்-
Advertisement