உடல் நலம் தெரிவரும் யாஷிகாவை வீட்டிற்கே சென்று சந்தித்துள்ள நடிகர் - யாரு பாருங்களேன்.

By Rajkumar · 26/9/2021

விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று தற்போது உடல் நலன் தேறி வரும் யாஷிகாவை அவரது வீட்டிற்கே சென்று சந்தித்துள்ளார் நடிகர் ஒருவர். கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னை, மாமல்லபுரம் அருகே நடந்த கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயகங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தில் வள்ளி ஷெட்டி பவானி என்ற பெண் பலியானார்.

இந்த விபத்தில் சிக்கிய யாஷிகாவிற்கு பல எலும்புகள் முறிந்த நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தன் உடல் நலம் குறித்து பதிவிட்ட யாஷிகா, இடுப்பு எலும்பில் பல எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. காலில் எலும்பு முறிவு. சர்ஜரிக்குப் பிறகு ஓய்வெடுத்து வருகிறேன். என்னால் அடுத்த 5 மாதத்திற்கு நிற்கவோ நடக்கவோ முடியாது. அதனால் இயற்கை உபாதைகள் உட்பட எல்லாமே படுக்கையில் தான்.

இதையும் பாருங்க : யூடுபில் வலிமையை முந்திய டாக்டர் - அட, உண்மதான் எந்த விஷயத்தில் பாருங்க

இடம், வலம் கூட திரும்ப முடியாது. எனது முதுகு பலத்த காயமடைந்துள்ளது. நிச்சயமாக இது எனது மறுபிறப்பு தான். கடவுள் என்னை தண்டித்து விட்டார். ஆனால் நான் இழந்ததை ஒப்பிடுகையில், இது ஒன்றுமே இல்லை என்றும் கூறி இருந்தார். மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ள யாஷிகா கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறார்.

சமீபத்தில் தான் படுக்கையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில் சிறு நீர் போவதற்கு கூட பைப் பொருத்தப்பட்டு இருந்ததை காண முடிந்தது. இப்படி ஒரு நிலையில் உடல் நலம் தேறி வரும் யாஷிகாவை அவரது வீட்டிற்கே சென்று சந்தித்து உள்ளார் நடிகர் அசோக். இவர் தமிழில் முருகா பிடிச்சிருக்கு காதல் சொல்ல ஆசை போன்ற படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full