யூடுபில் வலிமையை முந்திய டாக்டர் – அட, உண்மதான் எந்த விஷயத்தில் பாருங்க

0
1986
doctor
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் அல்டிமேட் ஸ்டார் ஆக ஜொலித்துக் தல அஜித். அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை மற்றும் விஸ்வாசம் ஆகிய இரண்டு படமுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும்,வசூலையும் பெற்று இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது வினோத் இயக்கத்தில் தல அஜித் அவர்கள் வலிமை படத்தில் நடித்து வருகிறார். கொரோனா காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் தற்போது வெளிநாடுகளில் வலிமை படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து உள்ளது.

-விளம்பரம்-

மேலும், வலிமை படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆவலாக காத்திருக்கும் நிலையில் சமீபத்தில் வலிமை படத்தின் Glimpse வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. இது ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் வரவேற்க்கப்பட்டது. இந்நிலையில் வலிமை படத்தை முந்திக்கொண்டு சிவகார்த்திகேயனின் படம் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அப்படி என்ன விஷயம் என்றால் சிவகார்த்திகேயன் நடித்து உள்ள டாக்டர் படத்தின் ட்ரைலர் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சோசியல் மீடியாவில் இந்த டாக்டர் படத்தின் ட்ரைலர் அஜித் வலிமை படத்தை முந்திக்கொண்டு நம்பர்.1 ட்ரெண்டிங்கில் உள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன்– பிரியங்கா அருள் மோகன் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் டாக்டர். இந்த படத்தை நெல்சன் அவர்கள் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

மேலும், இந்த படத்தில் யோகி பாபு, வினய் உள்பட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் இருந்து வெளிவந்த செல்லம்மா செல்லம்மா பாடல் சோசியல் மீடியாவில் வேற லெவல்ல ட்ரெண்டிங் ஆனது.

-விளம்பரம்-
Advertisement