‘என் ஹேட்டர்ஸ்களுக்கு ஒன்னு சொல்லிக்கிறேன்’ – படுக்கையில் புரண்டபடி யாஷிகா சொன்ன மெசேஸஜ். வைரல் பதிவு.

0
851
yashika
- Advertisement -

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னை, மாமல்லபுரம் அருகே நடந்த கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயகங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த விபத்தில் வள்ளி ஷெட்டி பவானி என்ற பெண் பலியானார். மேலும், யாஷிகா மீதும் வழக்கு பதியப்பட்டு இருந்தது. இந்த விபத்தில் சிக்கிய யாஷிகாவிற்கு பல எலும்புகள் முறிந்த நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தன் உடல் நலம் குறித்து பதிவிட்ட யாஷிகா, இடுப்பு எலும்பில் பல எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

-விளம்பரம்-

அதே போல தன் உடல் நிலை குறித்து பதிவிட்ட யாஷிகா, இடுப்பு எலும்பில் பல எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. காலில் எலும்பு முறிவு. சர்ஜரிக்குப் பிறகு ஓய்வெடுத்து வருகிறேன். என்னால் அடுத்த 5 மாதத்திற்கு நிற்கவோ நடக்கவோ முடியாது. அதனால் இயற்கை உபாதைகள் உட்பட எல்லாமே படுக்கையில் தான். இடம், வலம் கூட திரும்ப முடியாது. எனது முதுகு பலத்த காயமடைந்துள்ளது என்று கூறி இருந்தார்.

- Advertisement -

மீண்டு வந்த யாஷிகா :

மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ள யாஷிகா கொஞ்சம் கொஞ்சமாக தேறி வரும் யாஷிகா அடிக்கடி தண்னுடைய உடல் நிலை குறித்து தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுவந்தார். சமீபத்தில் நடத்த ஒரு கடை நிகழ்ச்சிக்கு கையில் வால்கிங் ஸ்டிக்குடம் நடந்து வந்தார். அதை பார்த்த ரசிகர்கள் பலரும் கொஞ்சம் நெகிழ்ந்து போனார்கள்.

அதே போல விபத்திற்கு பின்னர் யாஷிகா பெரும்பாலும் தன்னுடைய பழைய புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். ஆனால், சமீப காலமாக தான் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அதற்கு ரசிகர்கள் இவருக்கு விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள் சொன்னாலும் இவரது ஹேட்டர்ஸ்கள் இன்னமும் இவரை திட்டி தீர்த்து தான் வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் தன் ரசிகர்களுக்கும் ஹெட்டர்ஸ்களுக்கும் இன்ஸ்டாகிராம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

-விளம்பரம்-

ஹேட்டர்ஸ்களுக்கு பதிலடி :

This image has an empty alt attribute; its file name is image-158.png

அந்த வீடியோவில் படுக்கையில் உருண்டு கொண்டு இருக்கும் யாஷிகா ‘நடந்து கொண்டு இருப்பதை நம்புங்கள், அனைத்தும் நன்றாக நடக்கும். என்னுடைய ஹேட்டர்ஸ்களுக்கு என்னால் உருண்டு புரண்டு படுக்க முடிகிறது அதனால் நான் சிரித்துக் கொண்டிருக்கிறேன் இதுவே எனக்கு சாதனைதான்’ என்று பதிவிட்டிருக்கிறார்.

நீ இன்னும் சாகலயா :

This image has an empty alt attribute; its file name is 1-248-618x1024.jpg

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் யாஷிகா, 4 மாதங்கள் கழித்து ஹேர் கலர் செய்து கொண்ட புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதற்கு ரசிகர் ஒருவர் ‘நீ இன்னும் சாகலயா’ என்று கமன்ட் செய்ய அதற்கு பதில் அளித்த யாஷிகா ‘நான் விரைவில் சக வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுங்கள்’ என்று கூறியுள்ளார்.

Advertisement