அஜித் இதை செய்ய வேண்டும் என்று எனக்கும் ஆசை தான். யாஷிகா போட்ட ட்வீட். வரவேற்கும் தல ரசிகர்கள்.

By Rajkumar · 30/12/2019

தமிழ் சினிமாவில் தற்போது இளசுகளின் சென்சேஷனல் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை யாஷிகா ஆனந்த் . தமிழில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான கவலை வேண்டாம் படத்தில் அறிமுகமானவர். அதன் பின்னர் துருவங்கள் பதினாறு, பாடம் போன்ற படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது 2018 ஆம் ஆண்டு வெளியான இருட்டு-அறையில்-முரட்டு-குத்து என்ற அடல்ட் காமெடி திரைப்படம் தான். இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த யாஷிகா ஆனந்த், கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்.

https://twitter.com/iamyashikaanand/status/1211251542956707843

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் உருவாகினார்கள். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் இவர் ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார். எப்போதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா ஆனந்த், சமீபத்தில் அஜித் குறித்து ட்வீட் ஒன்றை செய்திருந்தார். அந்த ட்வீட்டில் அஜித் ட்விட்டரில் சேர வேண்டும் என்று நானும் மிகவும் ஆசைப்படுகிறேன். என்னைப் போன்று எண்ணம் வேறு யாருக்கு இருக்கிறதா ? என்று பதிவிட்டிருந்தார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் எங்களுக்கும் வேண்டும் என்று ஆசைதான் என்று கமல் செய்து வருகின்றனர்.

இதையும் பாருங்க : நீச்சல் குளத்தில் குளிக்கும் வீடியோவை டிக் டாக் செய்து வெளியிட்ட சாமுராய் பட நடிகை.

என்ன திடீரென்று யாஷிகா அஜித்தை ட்விட்டரில் சேர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருக்கிறார் என்று பார்த்தால் இவர் மட்டுமல்ல ரசிகர்கள் பலரும் பாக்கியத்தை விட்டதில் இணைய சொல்லி பல்வேறு அன்பான கோரிக்கைகளை வைத்து வந்தார்கள் இதற்கு முக்கிய காரணமே சமீபத்தில் பெட்டர் இந்தியா நிறுவனம் சார்பாகட்விட்டர் பார்ட்னர்ஷிப் மேனேஜர் செரில் ஆன் கூட்டோரி அளித்த பேட்டி தான் காரணம். இவர் தான், அஜித் ட்விட்டரில் இனைய வேண்டும் என்று சமீபத்தில் விருப்பம் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/Thalakumar_V1/status/1211252546133618688

இந்த ஆண்டு அஜித் பெயரை குறிப்பிட்டு ட்விட்டரில் பல்வேறு ஹேஷ் டேக்குகள் ட்ரெண்டிங்கில் வந்தது.மேலும், இந்த ஆண்டில் ட்ரெண்டிங்கில் வந்த பல்வேறு ஹேஷ் டேக்குகளில் அஜித்தின் ஹேஷ் டேக்கும் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டின் ட்விட்டர், ட்ரண்டிங், ஹஸ்டக் இவையெல்லாம் குறித்து “தி ஹிந்து” ஆங்கில நாளிதழ் ஒன்று இந்தியாவின் ட்விட்டர் பார்ட்னர்ஷிப் மேனேஜர் செரில் ஆன் கூட்டோரி பேட்டி அளித்துஇருந்தார் . அப்போது பேட்டியில் அவரிடம் நீங்கள் எப்போதாவது அஜீத்தை தொடர்பு கொண்டு பேசி உள்ளீர்களா?? என்று கேட்டார்கள். அதற்கு செரில் ஆன் கூட்டோ கூறியது, அஜித் அவர்கள் ட்விட்டர் வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அவரது படங்களையும் ரசிகர்கள் ஒருவருக்கு ஒருவருடன் தொடர்பு கொள்வதையும் எந்த அளவுக்கு விரும்புகிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.

behindtalkies AMP · Quick view
View full