நீச்சல் குளத்தில் குளிக்கும் வீடியோவை டிக் டாக் செய்து வெளியிட்ட சாமுராய் பட நடிகை.

0
15182
Samurai
- Advertisement -

விக்ரம் நடிப்பில் கடந்த 2002ம் ஆண்டு வெளியான சாமுராய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனிதா ஹாசநந்தினி . மும்பையில் 1981ஆம் ஆண்டு பிறந்தவ இவர், தனது 20 வயதில் கடந்த 2001ஆம் ஆண்டு ‘கபி சவுதம் கபி’ என்ற ஹிந்தி படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன்பின்னர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், பாஞ்சாபி என பல மொழிகளில் 60க்கும் மேற்ப்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். ஆனால், இவர் தமிழில் அறிமுகமானது சாமுராய் படத்தில் தான்.

-விளம்பரம்-

- Advertisement -

ஆனால், சாமுராய் படத்திற்கு முன்பாகவே இவர், மனோஜுடன் நடித்த ‘வருஷமெல்லாம் வசந்தம்’ என்ற படம் வெளியாகி இருந்தது. சாமுராய் மற்றும் வருஷமெல்லாம் வசந்தம் படத்திற்கு பின்னர் ரவி கிருஷ்ணா நடித்த ‘சுக்ரன்’ படத்திலும் நடித்திருந்தார். இந்த படத்தினை இளைய தளபதி விஜய்யின் தந்தை இயக்கி இருந்தார். மேலும், இந்த படத்தில் அனிதாவை அறிமுகம் என்று டைட்டிலில் அறிவித்திருந்தார் எஸ் ஏ சந்திரசேகர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்க : திருமணத்திற்கு பெண் பார்க்க ஏ ஆர் ரஹ்மான் போட்ட 3 கண்டிஷன். இசை புயலின் ஆசையை பாருங்க.

சுக்ரன் படத்திற்கு பின்னர் இவருக்கு தமிழில் சொல்லிக்கொள்ளும்படி வாய்ப்புகள் வரவில்லை. அதன் பின்னர் நாயகன், மஹாராஜா போன்ற இரண்டு படங்களில் மட்டும் நடித்து வந்தார். தமிழில் வாய்ப்புகள் இல்லாத போதும் இவருக்கு இந்தி, கன்னடம், பஞ்சாபி என்று பல்வேறு மொழிகளில் பிஸியாக நடித்து வந்தார். பின்னர் கடந்த 2013ஆம் ஆண்டு ரோகித் ரெட்டி என்பவரை திருமணம் செய்துகொண்டார் அனிதா. எதிர்பார்த்த அளவு பட வாய்ப்புகள் குறைந்த பின்னர் டீவி சீரியல்களிலும் ரியாலிட்டி ஷோக்களிலும் நடிக்க துகாங்கினார் அனிதா.

-விளம்பரம்-

ஹிந்தி பிக் பாஸ் சீசன் 10ல் கலந்து கொண்டார் அனிதா. தற்போது ஹிந்தியில் ஒளிபரப்பாகும் நாகினி சீரியலின் மூன்றாம் பாகத்தில் நடித்து வருகிறார். எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் அனிதா அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். மேலும், அம்மணி டிக் டாக்கிலும் இருக்கிறார். சமீபத்தில் நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் குளிக்கும் வீடியோவை டிக் டாக் செய்து வெளியிட்டுள்ளார் அம்மணி. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி பரவி வருகிறது.

Advertisement