பிக் பாஸ் வீட்டிற்கும் நுழைந்த சீசன் 2 ஜோடிகள்.! கவினுக்கு இனி கொண்டாட்டம் தான்.!

0
14757
yashika
- Advertisement -

கடந்த மூன்று மாதங்களாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் இறுதி வாரத்தை நெருங்கியுள்ளது. இன்னும் 6 போட்டியாளர்கள் மட்டும் மீதமுள்ள நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற டிக்கெட் டு பினாலே டாஸ்கில் முகென் வெற்றிபெற்று இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளார்.

-விளம்பரம்-

மேலும், நேற்று வாரத்தின் முதல் நாள் என்பதால் நாமினேஷன் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இறுதி வாரம் என்பதால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள முகெனை தவிர மீதம் இருக்கும் 5 போட்டியாளர்கள் அனைவரும் இந்த வார எலிமினேஷனுக்கு நேரடியாக நாமினேட் ஆகியுள்ளனர்.

இதையும் பாருங்க : டாஸ்க்கினால் முகெனுக்கு ஏற்பட்ட காயங்கள்.! நேற்றய நிகழ்ச்சியில் முகெனின் இந்த இடத்தை கவனித்தீர்களா.!

- Advertisement -

எனவே, இந்த வாரம் போட்டிகள் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் கடந்த சீசனில் கலந்து கொண்ட யாஷிகா மற்றும் மஹத் சிறப்பு விருந்தினர்களாக நுழைந்துள்ளனர். யாஷிகா உள்ளே நுழைந்ததால் கவினுக்கு இனி கொண்டாட்டமாக இருக்கும் என்று ரசிகர்கள் கமன்ட் செய்து வருகின்றனர்.

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சி பொதுவாக ஞாயிற்று கிழமைகளில் தான் நிறைவடையும். அந்த வகையில் இந்த வாரம் 100 நாட்களை நிறைவு செய்ய முடியாததால் பிக் பாஸ் நிகழ்ச்சி அடுத்த வாரம் தான் நிறைவு பெற இருக்கிறது. எனவே, கடந்த சசனை போல இந்த சீசனும் 105 நாட்கள் நடைபெற இருக்கிறது என்பது கூடுதல் தகவல்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement