கடை திறப்பு விழாவில் வால்கிங் ஸ்டிக்குடன் நடந்து வந்த யாஷிகா. ஆனா, வீட்டில் நல்லா தான நடந்து இருக்காரு. இதோ வீடியோ.

By Arun · 25/11/2021

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னை, மாமல்லபுரம் அருகே நடந்த கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயகங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த விபத்தில் வள்ளி ஷெட்டி பவானி என்ற பெண் பலியானார். மேலும், யாஷிகா மீதும் வழக்கு பதியப்பட்டு இருந்தது. இந்த விபத்தில் சிக்கிய யாஷிகாவிற்கு பல எலும்புகள் முறிந்த நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தன் உடல் நலம் குறித்து பதிவிட்ட யாஷிகா, இடுப்பு எலும்பில் பல எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

https://www.youtube.com/watch?v=iRZIRy52h6A

அதே போல தன் உடல் நிலை குறித்து பதிவிட்ட யாஷிகா, இடுப்பு எலும்பில் பல எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. காலில் எலும்பு முறிவு. சர்ஜரிக்குப் பிறகு ஓய்வெடுத்து வருகிறேன். என்னால் அடுத்த 5 மாதத்திற்கு நிற்கவோ நடக்கவோ முடியாது. அதனால் இயற்கை உபாதைகள் உட்பட எல்லாமே படுக்கையில் தான். இடம், வலம் கூட திரும்ப முடியாது. எனது முதுகு பலத்த காயமடைந்துள்ளது என்று கூறி இருந்தார்.

இதையும் பாருங்க : பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த மேலும் ஒரு புதிய நபர். மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் பிரியங்கா ? (மீண்டும் ஒரு விஜய் டிவி பிரபலமோ)

மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ள யாஷிகா கொஞ்சம் கொஞ்சமாக தேறி வரும் யாஷிகா அடிக்கடி தண்னுடைய உடல் நிலை குறித்து தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் விபத்திற்கு முதன் முறையாக பின் எழுந்து நடந்த வீடியோ ஒன்றை பதிவிட்டு 95 நாட்களுக்கு முன் குழந்தை போல முதல் அடி எடுத்து வைக்கிறேன் என்று கூறி இருந்தார்.

https://www.youtube.com/watch?v=PYGGDJ-ZO8Q

இப்படி ஒரு நிலையில் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளார் யாஷிகா. உடல் நிலை குணமான நிலையில் நேற்று சென்னையில் ஒரு கடை திறப்பு விழாவிற்கு வந்தார். அப்போது நடக்க சிரமபட்டு கையில் வால்கிங் ஸ்டிக்குடன் நடந்து வந்தார். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன் தன் புதிய வீட்டின் கிரகபிரவேசத்தில் வால்கிங் ஸ்டிக் இல்லாமல் சாதாரணமாக நடந்து இருந்தார். அந்த வீடியோவை நீங்களே பாருங்க.

behindtalkies AMP · Quick view
View full