பாட்டிலை இப்படி கூட ஓபன் பண்ணலாமா.! இணையத்தில் வைரலாகும் யாஷிகாவின் வீடியோ.!

0
1653
Yashika
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் பங்குபெறும் பற்றி அவர்களுக்கு மிகவும் கவனத்தை ஏற்படுத்தி விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் இவரது பெயர் எங்கேயோ சென்றுவிட்டது.

-விளம்பரம்-

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கு முன்பாகவே இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு பெரும் புகழை ஏற்படுத்தி தந்தது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். அந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வரும் இவர், யோகி பாபுவுடன் ஜாம்பி படத்திலும் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இதையும் படியுங்க : 90 ஸ் கிட்ஸ் பேவரைட் டாப் சுரேஷ் தற்போதைய நிலை.! இப்போ என்ன செய்கிறார்.! 

- Advertisement -

எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா ஆனந்த் அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்துவது வழக்கம். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவு விடுவதும் வழக்கம். மேலும், இவர் பதிவிடும் பெரும்பாலான புகைப்படங்கள் கவர்ச்சியாகத் தான் இருக்கும்.

மேலும், யாஷிகா ஆனந்த் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சியில் ஈடுபடும் பழக்கம் உடையவர். இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தனது காலால் ஓங்கி அடித்து பாட்டிலின் மூடியை அடித்து தெரிகிறார். இந்த வீடியோவை கண்ட பலரும் யாஷிகா ஆனந்த் புகழ்ந்து வருகின்றனர்.

-விளம்பரம்-

Advertisement