மத்தவங்க காயப்படுத்தூரத்துல தான் அவர் ஸ்பெசலிஸ்ட்.! சேரனால் பல கஷ்டங்களை சந்தித்துள்ள பார்த்திபன்.!

0
92705
parthiban
- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் லாஸ்லியா மற்றும் கவினின் காதல் கதை தான் நீண்ட நாட்களாக ஓடிவந்தது. ஆனால், லாஸ்லியாவை மகளாக பாவித்து வரும் சேரன், கவினை எப்படியாவது லாஸ்லியாவிடம் இருந்து பிரிக்க வேண்டும் என்று போராடி வந்தார். அதற்கு ஏற்றார் போல கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற லாஸ்லியாவின் குடும்பத்தினரும் காதல் கத்திரிக்காய் எல்லாம் வேண்டாம் ஒழுங்காக கேம் விளையாடு என்று அறிவுறுத்துவிட்டு வந்தனர்.

-விளம்பரம்-

லாஸ்லாலியா மற்றும் கவினின் காதலை பிரித்தது சேரன் தான் என்று லாஸ்லியா மற்றும் கவின் ஆர்மி புலம்பி வருகிறது. இதனால் சேரன் காதலுக்கு எதிரானவர் என்று பலரும் புலம்பி வந்தனர். இதுமட்டுமல்லாது சேரன் பல விஷயங்களில் சுயநலமாக நடந்து வருகிறார் என்று பலரும் பல்வேறு குற்றசாட்டை முன்வைத்து வருகின்றனர்.

இதையும் பாருங்க : இன்று நடத்தப்பட்ட பினாலே டாஸ்க்.! இறுதி வரை போராடும் கவின் மற்றும் லாஸ்லியா.!

- Advertisement -

இந்த நிலையில் பிரபல இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற போது சேரன் குறித்து கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதில், சேரன் ஒரு சின்சியரான இயக்குனராக இருந்தாலும், மற்றவர்கள் காயப்படுவது குறித்து அவர் கவலைப்பட மாட்டார். அவருடைய பாரதிகண்ணம்மா படம் சாதிகள் ஒழிப்பை பற்றி பேசியது. ஆனால் படம் ரொம்ப சீரியஸாக இருப்பதை உண்ர்ந்தேன்.

Image result for cheran parthiban

அதன்பிறகு தான் நானும் வடிவேலுவும் வேறு ஒரு படத்துக்காக வைத்திருந்த காமெடி டிராக்கை பயன்படுத்தி பாரதிகண்ணம்மாவை கொஞ்சம் கலகலப்பாக மாற்றினோம். ஆனால், நான் கொடுத்த ஐடியா ஒர்க் அவுட் ஆகிடிச்சி என்றால் அவருக்கு பெயர் கிடைக்காது என்று அந்த காட்சியை அவர் படத்தில் வைக்க மறுத்தார். பின்னர் எப்படியோ சமாதானம் செய்து அந்த காட்சியை வைத்தோம்.

-விளம்பரம்-
Image result for bharathi kannamma  parthiban

ஆனாலும் சேரன் நிறைய தகராறு செய்து, ஊர் முழுவதும் எனக்கு கெட்டப் பெயரை உண்டாக்கினார். என்னோட கதையில் பார்த்திபன் நுழைகிறார் என குற்றஞ்சாட்டினார். சேரன் குறித்து மேலும், பேசிய பார்த்திபன், அவரிடம் எனக்கே பிடிக்காத சில விஷயங்களும் இருக்கிறது. ஏதோ ஒரு குப்பையான படத்தை பார்த்துவிட்டு, என்ன இது பார்த்திபன் படம் போல் இருக்கிறது என மேடையிலேயே பேசினார். மற்றவர்களை காயப்படுத்துவதை பற்றி அவர் கவலையே பட மாட்டார். அதில் தான் அவர் ஸ்பெஷல் என்று கூறியுள்ளார் பார்த்திபன்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement