திருநங்கை சிவின் கணேசனை போல் இமிடேட் செய்த அசீம். டிவியில் ஒளிபரப்பப்படாத வீடியோ. இப்படியா செய்வது ?

0
443
azeem
- Advertisement -

திருநங்கை சிவின் போல் அசீம் செய்து காட்டி வெறுப்பேற்றி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி மூன்றாவது வாரத்தின் இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம், அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாகி வருகிறது. பின் முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருக்கிறார். இந்த முறை நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்து இருக்கிறது. இதனால் போட்டியாளர்கள் ஓவ்வொருவரும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். மேலும், இந்த நிகழ்ச்சியில் அதிக ரசிகர் பட்டாளம் கொண்ட ஜிபி முத்து குடும்பத்தின் மீது இருந்த ஏக்கத்தின் காரணமாக தாமாகவே நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தார்.

- Advertisement -

பொம்மை டாஸ்க்:

இது பலருக்குமே அதிர்ச்சியை தந்திருந்தது. இவரை தொடர்ந்து கடந்த வாரம் முதல் எவிக்சன் நடந்தது. அதில் மெட்டிஒலி சாந்தி வெளியேறி இருந்தார். பின் வழக்கம் போல் இந்த வாரம் பொம்மை டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த டாஸ்க் கொடுத்தவுடன் போட்டியாளர்கள் மத்தியில் கலவரம் தொடங்கி இருக்கிறது. இந்த டாஸ்க் கொடுத்ததில் இருந்து அசீம் ஏற்கனவே இருந்ததை விட இன்னும் ஓவராக நடந்து கொண்டு வருகிறார். இவர் நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்தே போட்டியாளர்கள் மத்தியில் திமிராகவும், அடாவடித்தனமாகவும், தன்னுடைய குரல் தான் ஒலிக்க வேண்டும் என்ற நினைப்பிலும் நடந்து கொண்டு வருகிறார்.

வீட்டில் அசீம் குறித்த சர்ச்சை:

அதிலும் இவர், ஆயிஷாவை வாடி போடி என்று மரியாதை இல்லாமல் நடந்து கொண்டது குறித்து ரசிகர்கள் பலருமே கண்டனம் தெரிவித்திருந்தார்கள். அதனை தொடர்ந்து நிகழ்ச்சி தொடக்கத்திலிருந்து விக்ரமன் இருக்கும் அசீமிற்கும் செட்டே ஆகவில்லை. எந்த ஒரு விஷயத்தையுமே இருவரும் மாறி மாறி விவாதம் செய்து கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு போட்டியில் நிவாசினி கீழே விழுந்ததற்கு காரணம் தனலட்சுமி தான் என்று கடுமையாக திட்டி இருந்தார் அசீம் .

-விளம்பரம்-

அசீம் செய்த செயல்:

அது மட்டும் இல்லாமல் அத்துமீறி அசீம் கை வைத்ததாக தனலட்சுமி புகார் அளித்திருந்தார். இதனை எடுத்து விக்ரமன், அசீம் இடம் பயங்கரமாக வாக்குவாதம் செய்திருக்கிறார். மேலும், கடந்த வாரம் அசீம் நடந்து கொண்டதை அடுத்து போட்டியாளர்கள் முழுவதுமே ரெட் கார்டு கொடுத்திருந்தார்கள். இந்நிலையில் சிவின் கணேசனைப் போல் அசீம் செய்திருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதாவது, சண்டையில் அசீம் திருநங்கை சிவின் கணேசனை போல் இமிடெட்(உடல் மொழி) செய்து நடந்து காட்டி இருக்கிறார்.

கண்டனம் தெரிவித்த ரசிகர்கள்:

இப்படி இவர் செய்திருப்பது பலரையுமே காயப்படுத்தி இருக்கிறது. இதற்கு விக்ரமன், அசீமிடம் சண்டை போட்டு இருக்கிறார். தற்போது இந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள் பலரும் கொந்தளிப்பில் அசிமை வெளியேற்ற வேண்டும். இனிமேலும், கமல் சார் அமைதியாக இருந்தால் ஏற்றுக்கொள்ள முடியாது. அசீமிற்கு நல்ல ஒரு பாடத்தை கற்பிக்க வேண்டும் என்றெல்லாம் கமெண்டுகளை பதிவிட்டு வருகிறார்கள்.

Advertisement