‘புதுசா மாடு வாங்கி இருக்கோம்’ – பாலாஜி வெளியிட்ட வீடியோ (ஆமா, இத வச்சி எப்படி விவசாயம் பண்ணுவாரு)

0
603
balaji
- Advertisement -

புதுசா மாடு வாங்கி இருக்கோம் என்று பாலாஜி வெளியிட்ட வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் அனைவருக்கும் பிடித்த நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி உள்ளது. தமிழில் ஐந்து வருடங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி இருக்கிறது. சமீபத்தில் தான் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கோலாகலமாக முடிவடைந்தது.

-விளம்பரம்-

மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் முகம் தெரியாத நபர்கள் கூட மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்கள். அந்த வகையில் பிக் பாஸ் 4 வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ். இவர் இரண்டாவது இடத்தை பிடித்திருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் பெரிய அளவு பிரபலம் கிடைத்திருக்கிறது.

- Advertisement -

பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ்:

ஆனால், நிகழ்ச்சிக்கு பிறகு இவர் எந்த ஒரு பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. இதனால் இவர் சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கு பெற்று இருந்தார். இந்த நிகழ்ச்சி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி இருந்தது. முதல் சீசன் முதல் ஐந்து சீசன்களில் பங்கு பெற்ற போட்டியாளர்கள் தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார்கள். வித்தியாசமான முறையில் இந்த நிகழ்ச்சி நடந்து இருந்தது.

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி:

மேலும், 16 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் 12 பேர் வெளியேற்றப்பட்டு இறுதி வாரத்தில் பாலாஜி, நிரூப், தாமரை, ரம்யா ஆகிய 4 பேர் மட்டும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று இருந்தனர். இப்படி ஒரு நிலையில் 35 லட்ச ரூபாய் பரிசுத் தொகையுடன் பிக் பாஸ் அல்டிமேட் பட்டத்தை வென்றார் பாலாஜி முருகதாஸ். இரண்டாம் இடத்தை நிரூப்பும், மூன்றாம் மற்றும் நான்காம் இடத்தை ரம்யா மற்றும் தாமரையும் பிடித்துள்ளனர்.

-விளம்பரம்-

புதிய கார் வாங்கிய பாலாஜி:

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு பிறகு பாலாஜிக்கு சினிமாவில் ஹீரோவாக நடிக்க இருக்கும் தகவல் வெளியாகியிருந்தது. பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் படத்தில் தான் பாலாஜி ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. இந்த நிலையில் பாலாஜி முருகதாஸ் புதிய கார் ஒன்றை வாங்கிய தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இவர் புது கார் வாங்கியது குறித்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

கிண்டல் செய்த நெட்டிசன்கள்:

அதில் அவர், புதுசா மாடு வாங்கி இருக்கோ எனக் கூறியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும், பிக் பாஸில் இருந்த போது தான் ஒரு நிலம் வாங்கி எதிர் காலத்தில் விவசாயம் செய்வேன் என்று கூறி இருந்தார் பாலாஜி. ஆனால், இப்போது மாடு வாங்கி இருக்கோம் என்று காரை வாங்கி இருக்கிறார் என்று பாலாஜியை கழுவி ஊற்றி வருகின்றனர்.

Advertisement