அவன் எல்லாம் ஒரு ஆளா. சமுத்திரக்கனி பற்றி பேசிய மீரா மிதுன். ஆதாரத்தை வெளியிட்ட பழைய மேனஜர்.

0
2613
- Advertisement -

கடந்த சில நாட்களாக ட்விட்டரில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருவது மீரா மிதுனின் சர்ச்சை தான். அதிலும் சமீப காலமாக விஜய் மற்றும் சூர்யா குறித்து அவதூறாக பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் பாலிவுட்டை போலவே நேபோட்டிசம் இருக்கிறது. அதனால் தான் என்னை போன்ற பெண்கள் தமிழ் சினிமாவில் நிலைக்க முடியவில்லை என்றும் கூறி வருகிறார் மீரா மிதுன்.

-விளம்பரம்-

ஏற்கனவே, சில படங்களில் நடித்துள்ள மீரா மிதுன் பேட்ட படத்தில் திரிஷா கதாபாத்திரத்தில் முதலில் தான் தான் நடிக்க வேண்டி இருந்தது என்று ஒரு மிகப்பெரிய குண்டை கூட தூக்கி போட்டார். அதே போல சிவகார்த்திகேயனின் ‘நம்ம வீட்டு பிள்ளை ‘ படத்திலும் இவர் நடித்திருந்தார். ஆனால், இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பின்னர் இவரது காட்சிகள் படத்தில் இல்லை என்று பார்த்து ஷாக்காகி போனார். இந்த நிலையில் மீரா மிதுன் சமுத்திரக்கனி பற்றி பேசிய ஆடியோ ஒன்றை மீரா மிதுனின் பழைய மேனேஜர் வெங்கட் வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

நம்ம வீட்டு பிள்ளை படத்தில் இருந்து இவரது காட்சிகளை நீக்கப்பட்டதற்கான காரணத்தை கூறிய மீரா மிதுன், பத்துநாட்கள் சுட்டெரிக்கும் சூரியனின் நேரம் பார்க்காமல் இந்தப்படத்தில் நான் நடித்திருந்தேன். மேலும், ஜிகிரி தோஸ்து என்ற பாடலிலும் நடித்திருந்தேன். ஆனால், பிக்பாஸில் இருந்து நான் வெளியே வந்ததும் சன் பிக்சர்ஸ் மற்றும் இயக்குனர் பாண்டியராஜன், விஜய் தொலைக்காட்சியில் சென்றதால் என்னை அந்த படத்திலிருந்து நீக்கியதாக கூறியிருந்தார்.

அதே போல தமிழ் சினிமாவில் இருக்கும் பல்வேறு வித தடங்கல்கள் நினைத்து நான் வருந்துகிறேன் சிவகார்த்திகேயனும் விஜய் தொலைக்காட்சியில் இருந்து வந்தவர் தானே படத்தின் தரத்தையும் நடிகர்களில் தரத்தையும் உயர்த்த தொழிலில் கொஞ்சம் கலாச்சாரத்தை பின்பற்றுங்கள். இப்போதுதான் எனக்கு புரிகிறது பிரியங்கா சோப்ரா ஏன் இன்னும் தமிழ் சினிமாவில் நடிக்க வரவில்லை என்று. திறமையான பெண்கள் தமிழ் சினிமாவில் நிலைக்க முடியாது மேலும் ஆணாதிக்கம் புத்தி கொண்ட சில நடிகர்கள் தங்களுக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சி காரணமாக திறமையுடைய பெண்களுடன் நடிக்க மறுக்கிறார்கள் என்றும் கூறியிருந்தார்.

-விளம்பரம்-
Advertisement