கமல் பிறந்தநாளுக்கு பிரதீப் சொன்ன வாழ்த்து – அவர் போட்ட ஹேஸ் டேக் தான் அங்க மேட்டர். கமலுக்கே Thug Lifeஆ?

0
378
Kamal
- Advertisement -

கமல் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பிரதீப் பதிவிட்டு இருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பிரதீப் வெளியேற்றப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.இந்த சீசன் துவங்கியதில் இருந்து பிரதீப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருந்து வந்தது. எனவே அவரை டார்கெட் செய்து பல விஷயங்களை செய்தனர். இதற்கு ஏதுவாக பிரதீப் பேசிய சில அநாகரிகமான வார்த்தைகளும் சில எல்லை மீறி செயல்களும் அவரது எந்த வெளியேற்றத்திற்கு காரணமாகிவிட்டது.

-விளம்பரம்-

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு டாஸ்கின் போது கூல் சுரேஷ் பிரதீப் தாய் படிக்கும் சொல் ஒன்றே பேசி விட்டதாக சர்ச்சை வெடித்தது இதனால் மற்ற போட்டியாளர்களும் பிரதீப் மீது கடும் அதிருப்தி அடைந்தனர்.எனவே இந்த வாரம் கமல் சாரிடம் இதுகுறித்து முறையிட போவதாக தான் மாயா மற்றும் அவரது குழுவினர் முடிவெடுத்தார்கள். ஆனால், நேற்றைய நிகழ்ச்சியில் கூல் சுரேஷ் பிரச்சனைகள் இருந்து விலகி பிரதீப்பால் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று வேறு ஒரு புதிய பஞ்சாயத்தை கிளப்பி விட்டார்கள்.

- Advertisement -

ஆனால், இதுனால் வரை பிரதீப் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் அப்படி என்ன நடந்து கொண்டார் என்பதை ஒரு மணி நேர நிகழ்ச்சியிலோ 24 மணி நேர லைவ் நிகழ்ச்சியிலோ காண்பிக்கப்படவில்லை. பிரதீப் என்னதான் மோசமாக பேசியிருந்தாலும் அவரை ஒரு உவமனைசராக முத்திரை குத்தி வெளியில் அனுப்பி இருப்பது அவரது எதிர்காலத்தை நிச்சயம் பாதிக்கும் இந்த விஷயத்தில் கமல் கூட யோசிக்காமல் செய்துவிட்டார் என்பதே பலரின் கருத்தாக இருந்து வருகிறது.

பிரதீப் வெளியேற்றத்திற்கு மாயா&கோ தான் முக்கிய காரணம் என்றாலும் கமல் இந்த விஷயத்தை தீர விசாரிக்காமல் செயல்பட்டுவிட்டார் என்பதே பலரின் வாதமாக இருந்து வருகிறது. இப்படி ஒரு நிலையில் பிக் பஸில் இருந்து வெளியேறிய பிரதீப் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘பிக் பாஸில் வென்ற சில ஸ்டார்களையும், பேட்ச்களையும் பதிவிட்டு என்று உருக்கமுடன் பதிவிட்டு இருந்தார் பிரதீப்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கும் வகையில் பிரதீப் பதிவு ஒன்றை போட்டுள்ளார். பிரதீப் வெளியிட்டிருந்த  ட்விட்டர் பதிவில், “நான் உங்களின் பெரிய ரசிகன் சார். உங்களுடைய 69 வது பிறந்த நாளிற்கு என்னுடைய வாழ்த்துகள். தமிழ் சினிமாவிற்கு நீங்கள் அளித்த கலை மற்றும்  பங்களிப்பு மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. லவ் யூ சார் என்று பதிவிட்டு இருக்கிறார்,

மேலும், அவர் பதிவிட்ட பதிவின் கீழ் கமலின் ‘வசூல் ராஜா’ படத்தில்  வரும் ‘ இவரு Exit கொடுக்குறாராம் எனக்கு, நான் என்ட்ரி கொடுக்கும் ஆளுங்க. யாருன்னா வேணும்னு செய்வார்களா நான் செய்வேன். அதான் நாம்ம ஸ்டைல் என்ற வசனம் வரும் காட்சியை வைத்து மீம் வீடியோ ஒன்றையும் பகிர்ந்திருக்கிறார்.  மேலும், அந்த பதிவில் நல்லா இருங்க, தீராத விசாரிப்பதே மெய் என்ற ஹேஸ் டேக்குகளையும் பதிவிட்டு இருக்கிறார்.பிரதீப்பின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement