என் சிம்ரன் இதெல்லாம் – அரைகுறை ஆடையில் ஆட்டம் போட்டது குறித்து அட்வைஸ் செய்தவர்களுக்கு விஜயலக்ஷ்மி பதிலடி.

0
1923
vijaya
- Advertisement -

தனது உடையை கேலி செய்து பாடம் எடுத்தவர்களுக்கு பிக் பாஸ் விஜயலக்ஷ்மி பதிலடி கொடுத்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் வயல்ட் கார்ட் என்ட்ரி மூலம் நுழைந்தவர் நடிகை விஜயலக்ஷ்மி. பிரபல இயக்குனர் அகத்தியனின் மகளான இவருக்கு நிரஞ்சனி என்ற சகோதரியும் இருக்கிறார், அவரும் ஒரு சினிமா பிரபலம் தான்.நடிகை விஜயலட்சுமி, 2007 ஆம் ஆண்டு வெளியான ‘சென்னை 28’ படத்தின் மூலம் அறிமுகமானார் விஜயலக்ஷ்மி. அதன் பின்னர் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். இறுதியாக சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

இவர் தனது பள்ளி பருவ தோழரான பெரோஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. மேலும், விஜயலட்சுமியின் கணவர் பெரோஸ். விஜயலட்சுமியின் கணவர் பெரோஸ், பண்டிகை என்ற படத்தை கூட இயக்கி இருந்தார்.தற்போது விஜயலக்ஷ்மியின் சகோதரியான கனி, குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.

- Advertisement -

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களையும் விடீயோக்களையும் பதிவிடுவது வழக்கம், அந்த வகையில் சமீபத்தில் இவர் குட்டையான டவுசர் அணிந்து ஆட்டம் போட்ட வீடியோ தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. இப்படி ஒரு நிலையில் இந்த வீடியோவிற்கு பல்வேறு விதமான விமர்சனங்கள் எழுந்தன.

இதில் நெட்டிசன் ஒருவர் ‘என்ன சிம்ரன் இதெல்லாம்’ என்று கமன்ட் செய்ய ‘ஆமா வடிவேலு, இப்படி ஆகி போச்சு ‘ என்று பதிலடி கொடுத்துள்ளார். மேலும், பொது நலம் கருதி எனக்கு அட்வைஸ்சை அள்ளி குடுத்த எல்லார்க்கும் என் நன்றிகள். ஆனால், என் வாழ்க்கையை நன்றாக இருக்கிறது. எனவே, நன்றி. அனைத்தையும் தாண்டி என்னோட அழகான மக்களுக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார் விஜயலக்ஷ்மி.

-விளம்பரம்-
Advertisement