அஜித் பிறந்தநாளில் ட்ரெண்டிங்கில் வந்த விஜய் ஹேஷ் டேக். சரியான டேக் என்று பதிவிட்ட பிகில் பட நடிகை.

By Rajkumar · 1/5/2020

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் அஜித் குமார். ரசிகர்கள் அன்போடு 'தல' என்று அழைக்கப்படும் அஜித், 1993-ஆம் ஆண்டு வெளி வந்த 'அமராவதி' என்ற படத்தில் தான் முதன் முறையாக கதையின் நாயகனாக நடித்தார். அந்த படத்தினை இயக்குநர் செல்வா இயக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து 'பவித்ரா, ஆசை, வான்மதி, கல்லூரி வாசல், காதல் கோட்டை, உல்லாசம், காதல் மன்னன், வாலி, அமர்க்களம், சிட்டிசன்' போன்ற பல படங்களில் நடித்தார் 'தல' அஜித்.

'தல' அஜித்துக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக அஜித் நடிப்பில் வெளி வந்த திரைப்படம் 'நேர்கொண்ட பார்வை'. இந்த படத்தினை பிரபல இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியிருந்தார். 'நேர்கொண்ட பார்வை' படத்துக்கு பிறகு மீண்டும் 'தல' அஜித்துடன் இயக்குநர் ஹெச்.வினோத் கூட்டணி அமைத்திருக்கும் படம் தான் 'வலிமை'. ஆக்ஷன் த்ரில்லர் ஜானர் படமான இது அதிக பொருட்செலவில் தயாராகி கொண்டிருக்கிறது.

இதையும் பாருங்க : ஜாக்கெட்ல ஜன்னல் வப்பாங்க நீங்க என்ன கதவு வச்சிருக்கீங்க ? சனம் ஷெட்டி புகைப்படத்திற்கு அந்த கமன்ட்.

இன்று (மே 1-ஆம் தேதி) 'தல' அஜித்தின் பிறந்த நாள். ஆகையால், அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லி சமூக வலைத்தளமான ட்விட்டரில் '#HBDThalaAjith, #AjithKumar, #தலஅஜித்' என்ற ஹேஸ் டேக் போட்டு ட்ரெண்ட் செய்து வருகிறார்கள் நடிகர் அஜித்தின் ரசிகர்கள்.அஜித் ரசிகர் டேக் போட்டால் விஜய் ரசிகர்கள் என்ன சும்மாவா இருப்பார்கள்.

https://twitter.com/RebaJohnOffl/status/1256084373834592256

அஜித் பிறந்தநாளான இன்று, விஜய் ரசிகர்கள், #VijayTheFaceOfKollywood, #NanbarAjith,#Master போன்ற ஹேஷ் டேக்குகளை ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். இந்த நிலையில் #VijayTheFaceOfKollywood என்ற ஹேஷ் டேக்கை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து சரியான டேக் என்று பதிவிட்டுள்ளார் பிகில் பட நடிகை ரேபா மோனிகா ஜான்.

இதையும் பாருங்க : அட, கொடுமையே சீரியலில் இப்படி கூட நடக்குமா? பல மாதங்கள் கழித்து போட்டுடைத்த பகல் நிலவு விக்னேஷ்.

பிகில் படத்தில் அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை ரேபா மோனிகா. மேலும், இந்த படத்தின் ஒரு காட்சியில் காதலை ஒப்புக்கொள்ளவில்லை என்று இவர் முகத்தில் ஒருவர் ஆசிட் அடித்து விடுவார். இதனால் கால்பந்து விளையாடுவதையே நிறுத்துவிடுவார் அனிதா (ரேபா). அதன் பின்னர் இவரை விஜய் சந்தித்து மீண்டும் கால்பந்து போட்டியில் பங்கு பெற செய்வார். இவரின் ரீ- என்ரியின் போது தான் 'சிங்கப்பெண்னே' பாடலே வரும்.

behindtalkies AMP · Quick view
View full