அட, கொடுமையே சீரியலில் இப்படி கூட நடக்குமா? பல மாதங்கள் கழித்து போட்டுடைத்த பகல் நிலவு விக்னேஷ்.

0
12615
pagalnilavu

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எத்தனையோ சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று விடுகிறது. அதிலும் ராஜா ராணி, மௌன ராகம், சின்னத்தம்பி, கடைக்குட்டி சிங்கம் என்று சினிமா டைட்டிலை ஒன்று விடாமல் பெயராக கொண்டு வந்த தொடர்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தது. அந்த வகையில் கடந்த ஆண்டு நிறைவடைந்த பகல் நிலவு சீரியல் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. 2016 ஆம் ஆண்டு துவங்கிய இந்த தொடர் 2019 ஆம் ஆண்டு வரை வெற்றிகரமாக ஓடியது.

GK Photoes: Vijay tv pagal nilavu serial Actress Sameera Sherief ...

700-வது எபிசோடை நெருங்கிக் கொண்டிருந்த வேலையில் ,இந்த தொடரில் இருந்து அன்வர் மற்றும் சமீரா ஜோடி வெளியேறினார். அன்வர் கார்த்திக் – சௌந்தர்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் குறைந்ததாகவும், அன்வர் கதையில் குறுக்கிட்டு டாமினேட் செய்ததே அதற்குக் காரணம் என்றும் பேசப்பட்டது.அன்வரும் சமீராவும். `குரூப் பாலிடிக்ஸ்’ என அன்வர் தெரிவித்திருந்த வார்த்தைக்கு, சௌந்தர்யா உள்ளிட்ட சக நடிகர், நடிகைகள் உடனே கண்டனமும் தெரிவித்திருந்தார்கள்.

- Advertisement -

இதனை தொடர்ந்து இந்த தொடரில் இருந்து விக்னேஷ் – சௌந்தர்யா ஜோடியும் சீரியலில் இருந்து விலகினார்கள். அவர்களை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் அசீம் மற்றும் ஷிவானி நடித்து வந்தார்கள். ஆனால், கார்த்தி – சௌந்தர்யா ஜோடிகளை ரசிகர்கள் மிகவும் மிஸ் செய்து வந்தனர். இந்த நிலையில் இந்த சீரியலில் இருந்து விலகிய உண்மையான காரணத்தை கூறியுள்ளார் கார்த்தி.

சமீபத்தில் முகநூலில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது ரசிகர் ஒருவர், ஏன் பகல் நிலவு சீரியலில் இருந்து விலகினீர்கள் என்று கேட்டாதற்க்கு ‘நானாக விலகவில்லை. சில சதியால் நான் விளக்கப்பட்டேன். அதற்கு காரணமானவர்கள் மரியாதைக்கு கூட பதில் சொல்லவில்லை, அவர்களுக்கு தைரியமும் இல்லை’ என்று ஷாக்கிங் பதிலை அளித்துள்ளார் விக்னேஷ் கார்த்தி.

-விளம்பரம்-

மேலும், கடந்த ஆண்டு இந்த சீரியலில் இருந்து விலகிய காரணத்தை சொன்ன சௌந்தர்யா, அன்வர் – சமீரா வெளியேறினது குறித்து நான் எதுவும் கருத்துச் சொல்ல விரும்பலை. அது அவங்க இஷ்டம். கதைல அடிக்கடி மாற்றம் செஞ்சது எனக்கும் விக்னேஷுக்கும் பிடிக்கல அதனால, 4 மாசத்துக்கு முன்னாடியே நானும், விக்னேஷ் கார்த்திக்கும் சேர்ந்து பேசி ஒரு முடிவெடுத்து வெளியேறிட்டோம் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement