பிகில் இசை வெளியீட்டு விழாவிற்காக போடபட்டு வரும் பிரம்மாண்ட செட்.! வீடியோ இதோ.!

0
1195
bigil
- Advertisement -

தமிழ் திரைப்பட உலகையே கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் ‘இளைய தளபதி’ விஜய்.அவரின் 63 வது படமான “பிகில்” படம் திரையரங்குக்கு இன்னும் சில நாட்களில் அதாவது தீபாவளி அன்று வரப்போகிறது. அதனின் கொண்டாட்டமாக நடிகர் விஜய்யின் பிகில் படத்தின் இசை வெளியீடு திருவிழா நடைபெறுகிறது என்று அதிகாரப்பூர்வமாக தயாரிப்பாளர் அறிவித்தார். இந்த இசை வெளியீட்டு விழா சென்னையில் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது மேலும் இந்த நிகழ்ச்சி குறித்த தகவல்கள் சன் டிவி தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒளிபரப்பாகும் என்றும் அறிவித்தார்கள்.விஜய் படம் என்றாலே ஒரு பிரம்மாண்ட ஆகவும் அதிக பட்ஜெட் செலவிலும் இருக்கும் என்று பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிகில் படம் ஒரு மாபெரும் வெற்றி விழாவை கொண்டாடும் அளவிற்கு எடுத்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

-விளம்பரம்-
Image

இந்த படம் மக்களை சந்தோஷப்படுத்தும் வகையில் அவர்கள் திருப்தி அடையும் வகையில் உள்ளது என்று கூறி உள்ளார்கள்.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் கண்டு கழிக்கும் ஒரு அற்புதமான படமாக இருக்கும்.இதனை தொடர்ந்து தற்போது இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கான மேடையை தயார் செய்து வருகிறார்கள் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவை பார்க்க ரசிகர்கள் அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு அனுமதி சீட்டை வாங்குகிறார்கள்.

- Advertisement -

இந்த இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியை குறித்த ஒரு வீடியோ ஒன்றையும் சமூக வலைத்தளங்களில் போட்டு உள்ளார்கள். அந்த வீடியோவில் விஜய் என்ன பேசுகிறார்? என்பது தான். இதன்மூலம் அனைவரும் ஆர்வமாகவும் ,ஆவலாகவும் உள்ளார்கள். மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த இசை விழா மேடை குறித்த தகவல்கள் பிரம்மாண்ட அளவில் அதாவது சங்கர் படம் போல் அந்த மேடை காட்சி அளிக்கும் என்று நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.மேலும் இதை தொடர்ந்து இளைய தளபதியின் பெண் ரசிகைகளுக்கு மட்டும் ஒரு போட்டி வைக்க போகிறேன் என்று நடிகை ரம்யா சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

மேலும், இந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அன்று இலவசமாக பிகில் படத்திற்கான டிக்கெட்டுகள் கொடுக்கப்படும் என்று அறிவித்தார். மேலும் இந்த இசை வெளியிட்டு திருவிழாவை ரம்யா தான் தொகுத்து வழங்க போகிறார் என்ற மற்றொரு தகவலும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை பற்றி தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டுள்ளார்

-விளம்பரம்-

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த 63 வது படமான பிகில் படம் தீபாவளியன்று வரப்போகிறது என்று படக்குழுவினர் அறிவித்தனர்.மேலும் தீபாவளி அன்று திரை உலகிற்கு வரவிருந்த விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் மற்றும் தனுஷின் பட்டாசு ஆகிய இரு படங்களும் தள்ளி வைத்து உள்ளார்கள். இது குறித்து பிகில் படம் மட்டுமே தீபாவளிக்கு திரைக்கு வரப்போகிறது. மேலும் இந்த செய்தி விஜய் ரசிகர்களுக்கு ஒரு பெரிய கிடா விருந்தாக இருக்கும் என்று வலைதளங்களில் பரவிவருகிறது.

அதுமட்டுமில்லாமல் படக்குழுவினர் பிகில் படத்தை தீபாவளிக்கு முன்பாகவே திரையரங்கிற்கு கொண்டு வர இருப்பதாக ஒரு சில செய்திகளும் வந்துள்ளன. ஏனென்றால் தீபாவளி பண்டிகை அக்டோபர் 27ஆம் தேதி அதாவது ஞாயிற்றுக் கிழமையாக உள்ளதால், 24ஆம் தேதி வியாழக்கிழமை அன்று திரையுலகிற்கு கொண்டுவரலாம் என்று ஒருபுறம் ஆலோசனை செய்துள்ளார்கள். கூடிய விரைவில் இதுகுறித்த தகவல்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்கள்.

மேலும் இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். விஜய் ஜோடியாக நயன்தாரா நடித்து உள்ளார்.விவேக், கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், யோகிபாபு ஆகிய பல நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுத்த படம் ஆகும்.பிகில் படத்தின் பாடல்கள் எல்லாம் இணையங்களிலும்,பாட்டு சேனல்களிலும் ஒளிபரப்பாகி வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement