கடுமையான உடற்பயிற்சி – உடல் எடையை குறைக்க இந்திரஜா எடுத்து வரும் முயற்சி – வீடியோ இதோ.

0
1509
indraja
- Advertisement -

தொலைக்காட்சியில் மேடை கலைஞராக இருந்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் ரோபோ ஷங்கர். பொதுவாக சினிமாவில் காமெடி நடிகர்களின் வாரிசுகள் களம் இறங்குவது வாடிக்கையான ஒரு விஷயம் தான். அந்த வகையில் ரோபோ ஷங்கரின் மகளான இந்திராவும் தற்போது தமிழ் சினிமாவில் அறியப்பட்ட நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

-விளம்பரம்-
https://www.instagram.com/p/CFL8TXmhLei/

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு மோசமான விமர்சனங்கள் வந்தாலும் வசூல் ரீதியாக இந்த படம் வெற்றியைகண்டது. நயன்தாரா விவேக் யோகிபாபு டேனியல் பாலாஜி கதிர் இந்துஜா என்று பல்வேறு முக்கிய நடிகர்கள் நடித்துள்ள இந்த படத்தில் ஒரு சில புதுமுக நடிகைகளின் அறிமுகமாகி இருந்தார்கள் அந்த வகையில் காமெடி நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜாவும் ஒருவர்.

- Advertisement -

இந்த படத்தில் பாண்டியம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் இந்திரஜா.இந்த படத்திற்கு பின்னர் ரோபோ ஷங்கருக்கு இணையாக ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார் இந்தரஜா. பிகில் திரைப்படத்திற்குப் பின்னர் தனது மகளுக்கு பல்வேறு படங்களில் நடிக்கும் வாய்ப்பு வருவதாக ரோபோ சங்கர் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார். சமீபத்தில் கூட நடிகை இந்திரஜாவுக்கு கடந்த ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்பு என்ற பிரிவில் விருது கிடைத்து இருந்தது .

https://www.instagram.com/p/CFGi0qkBU2V/

ஆரம்பத்தில் இருந்தே படு குண்டாக இருந்து வரும் இந்திரஜா சமீப காலமாக கடுமையான உடற்பயிற்சிகளை செய்து உடல் எடையை குறைக்க முயற்சி எடுத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் உடற்பயிற்சி செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறார். விரைவில் உடல் எடையை குறைத்து வேற லெவலில் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement