கடலில் சர்பிங் விளையாட்டை கற்று வரும் பிகில் பட நடிகை – இப்படி ஒரு ஆசையா ?

0
713
bigil
- Advertisement -

அட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த பிகில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. கடந்த ஆண்டு தீபாவளி திருநாளை முன்னிட்டு கடந்த ஆண்டு அக்டோபர் 25-ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் வெளியான 5 நாட்களிலேயே 200 கோடி வசூலை அடைந்து சாதனையை பெற்றுள்ளது ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசைஅமைத்திருந்தார். மேலும், தெரி, மெர்சல் போன்ற படங்களைத் தொடர்ந்து இந்தப் படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைந்தது விஜய் மற்றும் அட்லியின் கூட்டணி.

-விளம்பரம்-

பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியில் இந்துஜா ரெபா மோனிகா வர்ஷா பொல்லம்மா போன்ற ரசிகர்களுக்கு பல பரிட்சயமான நடிகைகள் நடித்திருந்தனர். இதில் ஒரு சில நடிகைகள் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி உள்ளார் அதில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் பிரபல காமெடி நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் அறிமுகமாகியிருக்கி இருந்தார்.

- Advertisement -

அதேபோல இந்த படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியில் ரசிகர்களுக்கு சில பரிச்சயமில்லாத அறிமுகநடிகைகளும் நடித்திருந்தார்கள். அந்தவகையில் இந்த படத்தில் காயத்ரி ரெட்டி என்பவரும் அறிமுகமாகி இருந்தார். மாடல் அழகியான இவர் பல்வேறு விளம்பர படங்களில் நடித்திருக்கிறார் அதேபோல கடந்த 2010ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற அழகிப் போட்டியில் முதல் 10 இடத்தில் இடம் பிடித்தவர்.

காயத்ரி ரெட்டி தனது 18 வயதில் மாடல் துறையில் அறிமுகமான நடிகை காயத்ரி ரெட்டி நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது முதல் படமே தளபதி விஜயின் படம் என்பதால் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் ஏற்பட்டுள்ளது. பிகில் திரைப்படத்திற்கு முன்பாக நடிகை காயத்ரி ரெட்டி பல்வேறு அழகிப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இப்படி ஒரு நிலையில் இவர் Surfing எனப்படும் கடல் சருகு விளையாட்டை கற்று வருகிறாராம்.

-விளம்பரம்-
Advertisement