தொலைக்காட்சிகளில் மேடை கலைஞராக இருந்து தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய காமெடி நடிகராக விளங்கி வருபவர் நடிகர் ரோபோ ஷங்கர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என்று பல்வேறு படங்களில் நடித்துள்ள ரோபோ ஷங்கரின் மகளும் தற்போது சினிமாவில் கால் பதித்துள்ளா.ர் ரோபோ ஷங்கரின் மகளான இந்திரஜா டிக்டாக்கில் பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு பிரபலமடைந்தார். மேலும் , அதன் மூலமாக அட்லி இவருக்கு இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பினையும் கொடுத்திருந்தார்.

மேலும், இந்த படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியில் தனது தந்தையைப் போல மிகவும் நகைச்சுவையான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ரோபோ ஷங்கரின் மகள். மேலும், படத்தின் டிரெய்லரில் எங்க அம்மாவும் குண்டு எங்க அப்பாவும்குண்டு அப்புறம் நான் மட்டும் எப்படி இருப்பேன் என்று ரோபோ சங்கர் மகள் பேசிய வசனங்கள் திரைப்படத்தில் இடம் பெறவில்லை. ஆனால், படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நடிகர் விஜய் ரோபோ ஷங்கரின் மகளைப் பார்த்து, நீ தின்னுவதற்கு மட்டும் தான் லாயக்கு. குண்டம்மா, குண்டம்மா என்று கூறுவது போல ஒரு வசனம் இடம் பெற்று இருந்தது. ஆனால், இந்த வசனம் உறுதி செய்வதாக இருக்கிறது என்று சமூக வளைதளத்தில் ஒரு புதிய சர்ச்சைகிளப்பியது.

Advertisement

உருவக்கேலி பிகில் காட்சிகள் நீக்கப்பட வேண்டும்! ஷாரூக் ஜக்தே இந்தியாவில் பல நுணுக்கங்களை கற்று தந்து வீராங்கனைகளை இந்தியாவிற்கு விளையாட வைக்கும் காட்சிகள் முகம் சுளிக்காத வகையில் அருமையாக இருக்கும். குண்டம்மா என சொல்லும் போது இவ்வார்த்தையை கடந்து வந்த பெண்களுக்கு வலியே! என்றும் சமூக வலைதளத்தில் விமர்சனம் உண்டானது. அதற்கு பதில் அளித்த இந்திரஜா, விஜய், படத்தில் குண்டம்மா என்று காட்சி படமாக்கபட்ட போது விஜய் சார் என்னிடம் ‘நான் உன்னை குண்டம்மா என்று கூப்பிடுவது தப்பாக ஒன்றும் உனக்கு இல்லையே’ என்று மன்னிப்பு கேட்டார் என்று கூறியிருந்தார் இந்திரஜா.

பிகில் திரைப்படத்திற்கு பின்னர் இந்தரஜா மிகவும் பிரபலமாகிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இந்திரஜா அட்லீ போன்றும் நயன்தாரா போன்றும் பேசி அசத்தியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், 150 நாட்க அவர்களுடனே இருந்ததால் அவர்களது அனைவரது மேனரிசமும் எனக்கு வந்து விட்டது என்று கூறியுள்ளார் இந்திரஜா.

Advertisement

Advertisement
Advertisement