பிகில் படத்தால் எனக்கு இத்தனை கோடி நஷ்டம்னு நான் சொன்னேனா ? - விளக்கமளித்த தயாரிப்பாளர்.

By Rajkumar · 29/5/2020

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் விஜய். பல ஆண்டுகளாக இளையதளபதி என்ற பட்டத்துடன் மாஸ் ஹீரோவாக திகழ்ந்து வரும் இவரது படங்கள் என்றாலே வசூல் ரீதியாக சாதனை படைத்து வருகிறது இறுதியாக இவரது நடிப்பில் வெளியான பிகில் திரைப்படமும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது. தெறி, மெர்சல் போன்ற படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்து அட்லி மற்றும் விஜய்யின் இந்த கூட்டணி. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25ஆம் தேதி இந்தப் படம் வெளியாக இருந்தது.

https://twitter.com/archanakalpathi/status/1265989455568990208

இந்தப் படத்தில் நடிகர் விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், இந்த படத்தில் நயன்தாரா, இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப், ஆனந்தராஜ், யோகிபாபு, விவேக், கதிர், இந்துஜா, டேனியல் பாலாஜி என்று ஒரு மாபெரும் நடிகர் பட்டாளமே நடித்து இருந்தது. பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும், இந்த படத்திற்கு போட்டியாக வெளியான கார்த்தியின் கைதி திரைப்படம் விமர்சன ரீதியாக வெற்றி கண்டது இதனால் பிகில் படத்திற்கு வரும் கூட்டம் நாளுக்கு நாள் குறைந்ததாக தியேட்டர் நிர்வாகிகள் அறிவித்திருந்தார்கள்.

இதையும் பாருங்க : கண்டிப்பா எல்லா குழந்தைகளுக்கும் இத பண்ணுங்க – அறந்தாங்கி நிஷா வெளியிட்ட வீடியோ. குவியும் பாராட்டு.

இருப்பினும் இந்த படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி அடைந்து உள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்திருந்தனர். வெளியான பத்து நாட்களிலேயே 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து இந்த படம் சாதனை படைத்தது. இதுவரை 300 கோடி வசூல் செய்துள்ளது என்ற கூறப்பட்ட இந்த படத்தால் தயாரிப்பார்களுக்கு 20 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக கூறியுள்ளார் என்று பிரபல செய்தி தளத்தில் செய்தி ஒன்று வெளியானது.

https://twitter.com/gvsreenitweetz/status/1265995571107475457

ஆனால், பிகில் திரைப்படத்தில் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி இப்படி ஒரு பேட்டியை அளிக்கவில்லை என்று கூறியுள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் பலரும் அந்த செய்த தளத்தின் மீது பல விமர்சனங்களை முன் வைத்தனர். மேலும், பிகில் படத்தால் தனக்கு 20 கோடி நஷ்டம் என்று செய்தி வெளியானது குறித்து ட்வீட் செய்துள்ள அர்ச்சனா கல்பாத்தியும் 'பொய்யான செய்தியை ஆராயும்படி ட்வீட் செய்துள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full