கண்டிப்பா எல்லா குழந்தைகளுக்கும் இத பண்ணுங்க – அறந்தாங்கி நிஷா வெளியிட்ட வீடியோ. குவியும் பாராட்டு.

0
4291
Aranthangi-nisha
- Advertisement -

சின்னத்திரையில் பெண் காமெடியன்கள் இருப்பது அரிதான ஒரு விஷயம். அப்படி சின்னத்திரையில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் அறந்தாங்கி நிஷா. காமெடி என்றால் எங்கள் ஏரியா என்று ஆண்கள் சொல்லிக்கொள்ளும் நிலையில் பெண்களாலும் காமெடி செய்ய முடியும் என்று நிரூபித்து காட்டியவர் அறந்தாங்கி நிஷா. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பல்வேறு ஆண் போட்டியாளர்கள் மத்தியில் கலந்துகொண்டு பிரபலமானார்.

-விளம்பரம்-
https://www.instagram.com/p/CAo2HQdgmUs/

காமெடி செய்வது பெண்களாலும் முடியும் என்று மக்கள் மத்தியில் தன்னுடைய நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தி அவர்கள் எண்ணம் தவறானது என்று நிரூபித்தவர் அறந்தாங்கி நிஷா. தன்னுடைய நகைச்சுவை பேச்சாற்றலால் பல மேடைகளில் கலக்கிய அறந்தாங்கி நிஷா தற்போது சினிமா துறையிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -

அறந்தாங்கி நிஷா கடந்த சில வருடங்களுக்கு முன் ரியாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் நிறைவடைந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்தார் நிஷா. அப்போது தான் இவருக்கு இரண்டாம் குழந்தை பிறந்தது.

https://www.instagram.com/p/CAs-Rq1gXuS/

மேலும் , தனது அம்மாவே தனக்கு மகளாக பிறந்துவிட்டார் என்று உருக்கமுடன் தெரிவித்திருந்தார் நிஷா. இந்த நிலையில் நிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகளுக்கு தாலாட்டு பாடி தூங்க வைக்கும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார், மேலும், அதில், தாலாட்ட இன்னிக்கி எல்லாரும் மறந்துட்டாங்க, அத கேட்டு தானா நாம வளர்ந்தோம். கண்டிப்பா எல்லா குழந்தைக்கும் தாலாட்டு பாடுவோம் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement