குளியல் தொட்டியில் பிகில் பட தென்றல் (அம்ரிதா) – ஒரு வேல வேம்பு(இந்துஜா) ஐடியாவா இருக்குமோ.

0
4742
amritha
- Advertisement -

அட்லீ இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நாடிப்பில் வெளியான ‘பிகில்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைபெற்றது. தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து இந்த படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைந்தது விஜய் மற்றும் அட்லீ கூட்டணி. பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியில் இந்துஜா, ரெபா மோனிகா, வர்ஷா பொல்லம்மா போன்ற ரசிகர்களுக்கு பல பரிட்சயமான நடிகைகள் நடித்து இருந்தனர்.

-விளம்பரம்-

இந்த படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியில் ரசிகர்களுக்கு சில பரிச்சயமில்லாத அறிமுக நடிகைகளும் நடித்து இருந்தனர். இந்த படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியில் கால்பந்து வீராங்கனையாக நடித்த பல்வேறு நடிகைகளும் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமாகிவிட்டார்கள். அந்த வகையில் இந்த படத்தில் தென்றல் என்று கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை அதிகம் ஈர்த்துள்ளார்.

- Advertisement -

நடிகை அமிர்தா விஜய் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான தெறி படத்தில் நடித்திருக்கிறார். அந்த படத்தில் சமந்தாவின் உறவினர் பெண்ணாக நடித்திருந்தார். ஆனால், தெறி படத்தில் இவர் சரியாக கணிக்கப்படவில்லை. இருப்பினும் பிகில் படத்தில் தான் இவருக்கு பெரும் பிரபலம் கிடைத்தது. பிகில் படத்திற்கு பின்னர் வணக்கம்டா மாப்ளே படத்தில் நடித்து இருந்தார்.

அதே போல பிக் பாஸ் புகழ் கவினுடன் ‘லிப்ட்’ படத்தில் நடித்துள்ளார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் இவர் குளியல் தொட்டியில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். ஏற்கனவே பிகில் படத்தில் இவருடன் நடித்த இந்துஜா, குளியல் தொட்டியில் போட்டோ ஷூட் நடத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement